அடைகாத்து கொள்ளும் அடையாளங்கள்
இந்தியனாக இருக்க சொல்கிறான்
ஒருவன்...
மற்றரொவனோ திராவிடநென்று
பெருமை பட்டு கொள் என்கிறான்...
தமிழன் என்று சொல்
தலை நிமிர்ந்து நில் என்கிறான்
இன்னொருவன்...
அடைகாத்து கொள்ளும் அடையாளங்கள்
ஆதாயம் இருப்பவனுக்கே...
மலமும், சிறுநீரும் வாழ்கையாகி
பொதுகழிப்பிடமே வீடாகி
போன எனக்கு...
எல்லா மயிரும்
ஒரே மயிர்தான்...