வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இந்தியாவில் முஸ்லீமல்லாத பெண்கள் நிலை

இந்தியாவில் முஸ்லீமல்லாத பெண்களின் நிலை என்று கேட் உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வு, இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவத‌ற்கு எதிராகவே உள்ளது.அந்த பட்டியலில், பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அதாவது 1000 ஆண்களுக்கு 927 பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர். இதற்குக் காரணம் உலகத்தைக் காண்பதற்கு முன்பே பெண் குழந்தைகள் கரு‌விலேயே அழிக்கப்படுவதுதான்.ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர். குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும், மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பெண்கள் தங்களது 22 வயதுக்குள்ளாகவே முதல் குழந்தையைப் பெற்று விடுகின்றனர். கருத்தடைக்காக பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், மருந்துகள் உண்பதுமாக உள்ளனர்.இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர். அப்படியே படித்தாலும், பள்ளியோடு பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு முடிந்து போகிறது.வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.வீடுகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக மணி நேரங்கள் வேலை செய்கின்றனர். சம்பளமும், அங்கீகாரமும் இன்றி எத்தனையோ பெண்கள் வீடுகளில் அடிமைகளைப் போல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.ஆணும், பெண்ணும் பணியாற்றும் ஒரே நிறுவனத்தில் ஆணை விட பெண்ணுக்குக் குறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது.ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இருவருக்கும் சமமான கூலி அளிக்கப்படுகிறது. அது விவசாயத்தில் மட்டும்தான்.பல்வேறு இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.பல குடும்பங்களில் பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை. அதேப்போன்று பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அளிக்கப்படுவதுமில்லை.எத்தனையோ பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர். காவல்துறை புள்ளி விவரத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர். ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள், ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் வன்முறைக்குள்ளாகிறாள், ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார், ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. கணக்கில் வந்ததே இப்படி என்றால் கணக்கில் வராதது எவ்வளவோ...இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16