கழுத்தறுபட்டு கிடக்கிறேன்,
என்னை சுற்றிலும்,
தலைகளும் முண்டங்களுமாய்
பிணங்கள்
கண்ணுக்கெட்டும் தூரத்தில்
கிடக்கிறது
அறுத்தெரியபட்ட முலை ஒன்று
அது என் தாயுடயதாகவோ
மனைவியுடயதாகவோ
சகோதரியுடையதாகவோ,
பக்கத்துக்கு வீட்டு பெண்ணுடையதாகவோ
இருக்கலாம்....
குண்டடிபட்டகுழந்தையின்
பிஞ்சு விரல்
என் மயிரை பற்றி இழுத்து
அடங்குகிறது,
பிணங்களோடு பிணமாகிறேன்
தீடீரென்று விழித்து பார்க்க
உறங்குகிறாள் மனைவி
வீட்டை சுற்றிலும் கேக்கிறது
பூட்சு கால்களின் சத்தம்