வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

பெரியாரியல் தோழர்களுக்கு ஒரு விளக்கம்!

விவேகானந்தர்
குர்ஆனும் அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத வினமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்8)

மகாத்மா காந்தி
இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனே அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள்.

முஹம்மது நபி பெரிய தீர்க்கதரிசி மஹா வீர புரு`ர் கடவுளைத் தவிர மனிதர் ஒருவருக்கும் அசாதவர். அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக நான் கண்டதில்லை. அவர் எப்படி உணர்ந்தாரோ அப்படியே செய்தார்.

அப்புண்ணிய புரு`ர் ஓர் பக்கிரி. அவர் செல்வத்தை விரும்பி இருப்பின் ஏராளமாகச் சேர்த்திருக்கலாம். அவரும் அவருடைய குடும்பத்தாரும் பந்துக்களும் மனமுவந்து அனுபவித்த க`டங்கள் துயரங்களைப் படிக்கும்போது என் கண்களிலிருந்து நீர் ததும்புகிறது

கடவுளிடம் அவர் மனது சதாகட்டுப்பட்டிருந்தது. கடவுள் கட்டளைக்கு எப்போதும் பயந்தே நடந்தார். மனித சமூகத்திடம் அளவற்ற கருணையும் கொண்டார்.அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)

அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)
வேதாகம இதிகாச பபுராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால் திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபி கள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஜவஹர்லால் நேரு
அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.

இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)

பண்டித கோபால கிரு`ண கோகலே
மகான் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனித வாழ்வைப் பற்றிய விசாரணையில் நான் இறங்கியபோது எனக்குத் தெளிவாக்கிய சில உண்மைகளைப் பற்றி நான் எழுதுவதில் மகிழ்கிறேன்.

அவர்களைப் அகில உலக சீர்திருத்தத்துக்காகவே <சுவரன் அனுப்பியுள்ளான். ஒரு பெரும் சீர்த்திருத்தக்காரருக்கு இருக்க வேண்டிய அனைத்துச் சக்திகளும் ஒரு மாமனிதருக்கு அமைந்திருக்க வேண்டிய எல்லா குணநலன்களும் அவர்களிடம் காணப்பட்டன. அக்கிரமச் செயல்களில் மூழ்கிக் கிடந்த அரேபிய நாட்டினரை முழுமையான மனிதர்களாக மாற்றிவிட்டார் அவர். அவர்களுள்<வு இரக்கத்தை கனிவை சகிப்புத்தன்மையை உண்டுபண்ணி காட்டுமிராண்டிகளாக அறிவீனர்களாகத் திரிந்துகொண்டிருந்த அம்மக்களைச் சில நாட்களுக்குள் உயர்ந்த ஆட்சியாளர்களாக மாற்றி அமைத்துவிட்டார். தம் சகோதரர்களின் உதிரத்தைச் சிந்தச்செய்வது சர்வ சாதாரணமான செயலென்று கருதிவந்தவர்களின் உள்ளங்களில் அண்ணல் அவர்களின் சீரிய போதனைகள்<வு இரக்கத்தை பரிவை உண்டுபண்ணிவிட்டன. இழந்துவிட்ட சமாதானத்தை அமைதியை அவர்கள் மீண்டும் நிலைபெறச் செய்துவிட்டனர். அவர்கள் சாந்தி சமாதானத்தின் பாதுகாவலர்களாக அமைந்துவிட்டனர். அக்கிரமக்காரர்களிடம் மகான் அவர்களுக்கு பரிவு ஏற்படாது.<சுவரன் அவர்களுக்குத் தூய உள்ளத்தையும் தயாள குணத்தையும் அளித்திருந்தான். அவர்கள் என்றும் நீதி வழுவியதே கிடையாது. அரேபியாவை வெற்றி கொண்ட பின்னர் தோல்வி கண்ட மக்களுக்கு அவர்கள் அருளாகவும் ஆதரவாகவும் அமைந்திருந்தார்கள். மகான் முஹம்மத் மீதும் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் இன்னல்களும் தொல்லைகளும் இழைத்துவந்த கயவர்களை வெற்றி கொண்ட பின் தூக்கிலிட்டிருக்கலாம். அதுதான் நியாயமும்கூட. எனினும் அவர்களைப் பழிக்குப் பழி வாங்காமல் யாவரையும் மன்னித்துவிட்டனர் மகான் முஹம்மத் அவர்கள். இந்த அரிதான நிகழ்ச்சிக்கு நிகரானவொன்றை நான் உலகச் சரித்திலேயே கண்டதில்லை. மகான் அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அரேபியாவிலும் இந்தியாவில் நடப்பது போன்றே விக்கிரக ஆராதனை நடந்துவந்தது. மகானின் போதனைகளால் விக்கிரக வழிபாடு முற்றாக ஒழிந்தது. இதன் பின்னரே ஒரே இறைபக்தியும் ஏகத்துவ எண்ணமும் மக்களின் உள்ளங்களில் தோன்றியது. மகான் பிறப்பதற்கு முன்னர் பெண்களுக்குரிய உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டுவந்தன. பெண்கள் இம்சிக்கப்பட்டுவந்தனர். அவர் பெண்களுக்கு உயர்நிலையை வழங்கினார். மேலும் அவர்களுக்கான உரிமைகளையும் அவர் வகுத்துத் தந்தார். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை முற்றும் களைந்து எல்லோரிடையிலும் சமத்துவத்தை நிலவச் செய்த மகான் அவர்களின் அந்த இயக்கம் இன்றும் உயிருடன் இயங்கிவருகிறது. ஏதேனும் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஏழையும் செல்வனும் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் யாசிப்பவனும் கொடுப்பவனும் ஒரே வரிசையில் நின்று தோளோடு தோள் உராய்ந்து கம்பீரமாக நிற்கும் காட்சியைக் காண்பீர்கள். இத்தகைய தனிப்பெரும் வி`சத் தன்மைகளால்தான் மகான் அவர்களை அறிர் பெருமக்கள் அனைவரும் விரும்புகின்றனர் அவர்களை மதிக்கின்றனர். வாருங்கள்! எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் முழங்குவோம் ஸ்ரீ முஹம்மதுக்கு ஜே! டாக்டர் அம்பேத்கார் (இந்திய அரசியல் சாசனத்தைத் வகுத்தவர்) பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதனை மனிதனாக வாழச்செய்து சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரவீந்திரநாத் தாகூர் முசல்மான்களை ஒன்றாக இணைப்பது அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பபு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு. (கோரா நாவல்) கவிக்குயில் சரோஜினி தேவி சகோதரத்துவப் பாடத்தை சுதந்திர உணர்வை சமத்துவப் பண்பாட்டைப் போதித்து இவ்வவுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன். உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான். இந்த உயர்நிலை இலட்சியத்தை தேவையைப் பாலைவனத்தின் தீர்க்கதரிசி ஒட்டகமோட்டி (அண்ணல் நபி) பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார். (கட்டுரைத் தொகுப்புகள்) ஹர்தே பிரகா` அராபியப் பாலைப் பிரதேசத்தில் முஹம்மது நபி (ஸல்) அவதரித்தது அரேபிய நாட்டிற்கும் இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். (கர்சிபுரம் மீலாது விழாவில்) இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான இறைமறை குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு என் இளமைக் காலத்திலேயே என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. திருக்குறளை நான் தெரிந்துகொண்ட காலத்திலேயே திருக் குர்ஆனையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமைகொள்கிறேன். ஏறத்தாழ முன்னூற்றுக்கும் அதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன். நானும் எனது கொள்கையும் சொல்லிவந்த சமுதாயச் சீர்திருத்த பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏக தெய்வக் கொள்கை எங்கட்கும் பெரிதும் பிரசாரத் துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூஜிக்காதீர் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு. மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப் பணி மீலாது மேடையணி மூலம் சுடர்விட நல்ல வாய்ப்பு இருந்தது. மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும் அதற்குச் சுற்றுச் சார்பும் சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ அப்படியே அதன் வழியே செல்பவர்கள் கெர்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாற்றமாக நாம் நடந்தால் தனக்குத் தீமையே விளையும் என்பதைத் தெளிவாக அறிந்தும் கெட்டுக் கிடக்கும் சுற்றுச் சார்புகளை அழித்தும் எவர் நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகிறாரோ அவரைத்தான் மகான் என்று நாம் அழைக்கிறோம். ஆனால் அத்தகைய மகான்கள் நமக்கு எப்பொழுதும் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும்பொழுது நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. (7.10.1957 சென்னை கடற்கரை மீலாது விழாவில்)நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீஸூம் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சியப் பொக்கி`மான இறைமறை திருக் குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றைக் கடமையாக்க முனையவில்லை. கடைபிடிக்கும் நடைமுறை வழியில் கணிசமாகக் கடைபிடிக்க வலியுறுத்தியது. இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் தூண்டுகோலாகும். (21.03.1966 அபிவிருத்தீஸ்வரம் பள்ளிவாசலில்) மதுரை ஆதினகர்த்தர் இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்டிகாள்கையையஜம் அதனைப் பின்பற்றி ஒபுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியஜம் முஞம்மது நபி (!ல்) அவர்கள் டிதளிவாகக் வுறிச் டிசன்றுள்ளார்கள். டிபருமானாரைப் பின்பற்றுவதிலெ டிபருமையஜண்டு உண்மையஜண்டு எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவஜள்டிகாள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார் சமுதாயக்டிகாள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார் சமயக்டிகாள்கையில் டிதளிவையஜம் எளிமையையஜம் நிலைநிறுத்தினார். இது எப்பழ அவரால் முழந்தது என்றால்ஃ அல்லாஞ்வின் பெரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி) மாவீரர்களில் ஒருவராக நான் முஹம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன. ஜார்ஜ் பெர்னாட்` நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்`டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றார்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர் ஒரு பேரரசின் நிறுவனர் ஒரு மதத்தின் நிறுவனர். சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா முஹம்மத் நபி (ஸல்) தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும் விசுவாசமும் குடும்பத்தின் மீது பரிவும் மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். ஜெனரல் பர்லாங் அரேபிய நபியின் சரிதையை அவர்களது குணாதிசியங்களை அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும். டான்லி லேன்புல் (வரலாற்றாசிரியர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும் அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன் என்று கூறினார். தாமஸ்கார்லைல் பெருமானார் (ஸல்) பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை கருத்தாழமிக்கவை. ஜூல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா யூத மனோதத்துவ விஞ்ஞானி) சரித்திரத்தில் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கீழ்க்காணும் மூன்று அம்சங்களுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அவை 1) தலைவராக இருப்பவர் வழிநடத்தப்படும் மக்களின் நல்வாழ்வவுக்கு வகை செய்ய வேண்டும். 2) ஒரு சமுதாயத்தை உருவாக்கி அந்த மக்கள் போதிய பாதுகாப்பும் பெறுகிறோம் என்ற உணர்வினைப்பெற வழிவகுக்க வேண்டும். 3) அவர்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பாஸ்டர் மற்றும் சால்க் போன்ற தலைவர்கள் முதல் நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். காந்தி கன்பூ`யஸ் அலெக்ஸாண்டர் சீஸர் மற்றும் ஹிட்லர் போன்ற தலைவர்கள் இரண்டாவது மூன்றாவது நிபந்தனையின் கீழ் வருகின்றவர்கள். ஆனால் புத்தர் மற்றும் ஏசு மூன்றாவது நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். எல்லாக் காலத்திலும் நின்று நிலவக் கூடிய பெரும் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. காரணம் அவர்களிடத்தில் இம்மூன்று அம்சங்களும் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும் மோசேயிடத்திலும் இவ்வம்சங்கள் யாவும் சற்றுக் குறைவான அளவில் இருந்தன. (15.07.1974 ஆமாண்டு டைம் வார இதழ் சரித்திரத்தில் முக்கியமான பெருந்தலைவர் யார்? என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில்) பாஸ்வொர்த் ஸ்மித் (வரலாற்றாசிரியர்) அரசாங்கத்தின் தலைவராகவும் மத வி`யத்தில் தலைவராகவும் இருந்துகொண்டு அன்னார் ஏககாலத்தில் சீஸராகவும் போப்பாகவுமே விளங்கிவந்திருக்கின்றார். ஆனால் அவர் போப்புக்குரிய படோடோபங்கள் இல்லாத ஒரு போப்பாகவும் சீஸருக்குரிய படைகளும் இல்லாத ஒரு சீஸருமாகவே விளங்கிவந்தார். ஒரு நிரந்தர படை இல்லாமலும் மெய்காப்பாளர் ஒருவருமில்லாமலும் அரண்மனை ஒன்றுமில்லாமலும் ஒரு நிரந்தரமான வருவாய்க்கு வழி ஒன்றுமில்லாமலும் எப்போதேனும் ஒருவர் ஆண்டவனது அதிகாரத்தைக் கொண்டே தாம் இவ்வுலகில் ஆட்சிபுரிந்துவந்ததாக கூறிக்கொள்ள உரிமை பெற்றிருப்பாராயின் அன்னவர் முஹம்மதாகவே இருந்துவந்தார். ஏனெனில் அவர் எல்லாவிதமான அதிகாரத்தையும் அதற்குரிய உபகரணங்கள் இல்லாமலும் அதற்கு வேண்டிய உதவிகள் இல்லாமலுமே செலுத்திவந்தார். ரெமண்ட் டெரோகு வரலாற்றில் குறிப்பிடக் கூடிய முதல் சர்வதேச சமுதாயப் புரட்சிக்கு வழிகோலியவர் முஹம்மதுவே ஆவார். நீதி தர்மம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாத உலகமுழுவதும் விரவக்கூடிய ஒரு நாட்டிற்கு அவர் அடிப்படைகள் இட்டிருக்கிறார். மனித சமுதாயத்தையும் பரஸ்பரம் உதவும் கடமையையும் சர்வதேச சகோதரத்துவத்தையும் அவர் போதிக்கிறார். ஜான்டேவன் போர்ட் (விஞ்ஞானி) நீதி நெறி வகுத்தோரும் வெற்றி பல கண்டோரும் ஆகியவருற்றுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றினைப் போன்று சரியான ஆதாரபூர்வமானதாகவவும் விரிவானதாகவும் வி`யங்கள் அடங்கியதாகவும் உறுதியான உண்மையுள்ளதாகவும் உள்ள வரலாற்றினை உடையவர் என நன்கு அறிந்த எந்த ஓர் அறிர் பெருமான் பெயரையும் குறிப்பிட இயலாது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.



பெரியாரியல் தோழர்களுக்கு ஒரு விளக்கம்!







பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தன்மனமாற்றத்திற்கு என்னகாரணம் என்பதையும் விளக்கியுள்ளார்!

சிண்டு முடிதலையும், சீண்டி விடுதலையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் சில ஏடுகள், பெரியார்தாசனின் மனமாற்றத்திற்கு உள்நோக் கங்களைக்கற்பித்து கொச்சைப் படுத்துகின்றன.
தந்தை பெரியார்திராவிடர் கழகச் செயலாளரும், நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான தோழர் ராமகிருஷ்ணன் இதன் பின்னணியில் சிறப்பான(?) காரணங்கள் இருக்கும், பிறகு அது வெளிவரும் என்று கூறியதாக ஒரு பத்திரிகை எழுதியுள்ளது.

பெரியார்தாசனை நீங்கள் எப்படி உங்கள் மதத்துக்குள் அனுமதிக்கலாம்(?) உங்கள் மதம் அவ்வளவு மட்டமாகி விட்டதா? என்று நம்மிடம் பொங்கி வெடித்தார். அறிவையே தன் அடை யாளமாகக் கொண்ட ஒரு மூத்த கவிஞர். பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவி அப்துல்லாஹ்வாக மாறியதால். பெரியாரியல் தோழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இருந்துவரும் உறவில் கீறல் விழுந்துள்ளதாக... இல்லை, பிளவே தோன்றியதாக... இல்லை... இல்லை... பகையுணர்ச்சியே வந்து விட்டதாக, சிலர் கீறல் விழுந்த குறுந்தட்டைப்போல் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள். அது அவர்களின் ஆசை போலும்...

தமிழ்ச்சமூகத்தைச் சாதி என்ற சதியால் பிளந்து கூறு கூறாக்கியுள்ள சமூகக் குற்றவாளிகளின் ஆசைக்கு பெரியாரில் தோழர்களோ அல்லது முஸ்லிம்களோ இரையாகி விடக்கூடாது. இடங்கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம் தரப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கத்தில், எவ்வித கட்டாயமும் இல்லை என்கிறது திருக்குர்ஆன். மிரட்டியோ உலக ஆசைக்காட்டியோ ஒருவரை இஸ் லாத்தை ஏற்கச் செய்வதற்கு அந்த மார்க்கமே தடை போடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) தன்னை வளர்த்தவரும், உயிருக்குயிராய் நேசித் தவருமான சிறியதந்தை ஆபூதாலிபைக் கூட கட்டாயப்படுத்த வில்லை. அவரும் கடைசிவரை இம்மார்க்கத்தில் இணையவில்லை.

நபிகள் நாயகம் மரணிக்கும் தருவாயில், அவர்களது கவச ஆடை, ஒரு யூதரிடம் அடமானமாக இருக்கும் அளவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள், முழு சுதந்திரத்தோடும், ஆட்சியாளருக்கே அடமானம் பெற்று கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வாக்கோடும் திகழ்ந்துள்ளனர்.

அவ்வாறே கலீஃபாக்களின் ஆட்சியிலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா தவர்களின் தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

இஸ்லாம் மார்க்கம் தான் இம்மை, மறுமை ஈருலக  வாழ்வின் வெற்றிக்கு ஒரேவழி என்று பரப்புரை செய்வது முஸ்லிம்களின் கடமை.
வணக்கத்திற்குரியவன்(ள்)(ர்) யாரு மில்லை. ஒரே இறைவனை (அரபியில் அல்லாஹ்)த் தவிர, முஹம்மது அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்று ஏற்று, குர்ஆனின் கோட்பாடுகள் படி வாழ்வை அமைத்துக் கொள்வது தான் முஸ்லிமாகுதல். முஸ்லிம் என்றால், இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவ(ர்) கட்டுப்பட்டவர் என்று பொருள். இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்ட யாரையும் தடுக்க முடியாது. தடுக்கும் உரிமை முஸ்லிம்கள் உள்பட யாருக்கும் இல்லை.

“ஒன்றேகுலம், ஒருவனே தேவன்” என்ற தத்துவம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் புதியதல்ல. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்” என்று நினைப்பதும் தமிழர்க் கொள்கைதான். அறியாமையில் உள்ள சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்து, இஸ்லாத்தை மதிப்பிடாமல் நேரடியாக இஸ்லாம் மார்க்கத்தை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வழியில்லை என்ற நிலைக்கே வந்துள்ளனர். இந்த சிந்தனைக்கு முன்னோடிகளாய் ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். கடவுள் மறுப்பில் கடைசி வரை உறுதியாக இருந்த தந்தை பெரியாரும், இனஇழிவு தீர இஸ்லாமே நன்மருந்து என்று பரிந்துரைத்துள்ளார்.

  முதலில் நாத்திகராக இருந்து பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொணடோர் ஏராளமானோர். இதற்கு அப்துல்லாஹ் அடியார் ஓர் உதாரணம்.

பெரியாரியல் தோழர்களும் இதில் அடக்கம். இஸ்லாத்தைத் தழுவிய பிறகும், பெரியார் இயக்கத்தில் செயல்பட்டதற்காக அவர்கள் வருந்தவில்லை. மாறாகப் பெருமையோடு நினைவு கூர்கின்றனர்.

முஸ்லிம்களிடையே புகுந்துள்ள சில மூடநம்பிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்த தந்தை பெரியாரும், இஸ்லாம் மார்க்கத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்ததில்லை.

தீய நடவடிக்கைகள் காரணமாகவோ, வேறு காரணத்திற்காகவோ ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அதன் காரணமாக இஸ்லாத்தின் மாண்பு எள்முனையளவும் குறைவ தில்லை. அதுபோல, எப்பேர்பட்டவர் இஸ்லாத்திற்குள் வந்தாலும், அதன் காரணமாக இஸ்லாத்திற்கு புதிதாக எந்த சிறப்பும் கூடுவதில்லை.

இஸ்லாம் என்பது விடுதலை மார்க்கம். அறியாமையிலிருந்து, சமூக ஒடுக்கு முறையிலிருந்து மன உளைச்சலிலிருந்து, விடுதலை பெற விரும்புவோருக்கு அது ஒரு வாழ்க்கைப்பாதை.

இஸ்லாம் மதம் மாற்றவில்லை. மாறாக விடுதலை செய்கிறது. (It is not the Conversion, But Liberation) எனவே, இஸ்லாத்தை தழு-வுவதென்பது பெரியாரியலுக்கும், பகுத்தறிவுக்கும் முரணானதில்லை. கடவுள் இல்லை என்பது தொடக்கம். அல்லாஹ் ஒருவனைத் தவிர என்பது அதன் தொடர்ச்சி. இறைமறுப்பாளர்கள் இஸ்லாத்தை  தழுவுவது கொள்கை பயணத்தின் தொடர்ச்சியே...

இறைநெறி தளத்தில் இஸ்லாத்தோடு கருத்துடன்பாடு இல்லையாயினும், சமூக தளத்தில் பெரியாரியல் தொழர்களோடு நமது நேசம், சுவாசம் போல என்றும் தொடரும். tmmk


பெரியார் தாசன் @ அப்துல்லாஹ்: பழக்கடையில் போர்க்கர...

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16