வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

நாம் வணங்க தகுதியான இறைவன் யார்

அல்லாஹ் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை, அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று நபியே! நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1-4) பகுத்தறிவின் தீர்ப்புமனிதன் இயற்கையிலேயே நன்மை - தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும் பகுத்தறிவு உடையவன். இப்பண்பு இறைவனின் அளப்பெரிய ஆற்றல்களை உணர உதவுவதுடன் வணக்கத்திற்குரியவன் ஓரிறைவனே என்பதை அறியவும் உதவுகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக, இரட்சகனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோரே அவர்களை தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில்; வளர்த்து விடுகின்றனர். இஸ்லாம்இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் எனும் பெயர்கூட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும். இறைத்தூதர்கள்இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள். இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்கு போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ''இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைக்கும் வல்லமை கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சு10ரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்'' எனப்தேயாகும். இறைவன் எப்படிப்பட்டவன்?அல்லாஹ்! அவன் ஒருவனே! அவனுடைய திருப்பெயர்களும் தன்மைகளும் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அவன் எண்ணைக் கொண்டோ, - ஆண்பால், பெண்பால் போன்ற - பாலினத்தைக் கொண்டோ அறியப்படுபவனல்ல. அல்லாஹ் என்பது இரட்சகனின் பெயர். இது நேசமிகு நபி ஈஸா(அலை) அவர்களின் அராமிக் மொழியின் துணை மொழியாகும். அல்லாஹ் என்ற இத்திருப்பெயர் முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதரான முஹம்மது(ஸல்)அவர்கள் வரை எல்லா நபிமார்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.படைப்பாளனாகிய அல்லாஹ்வே சர்வசக்தியுடையவன், ஆதியானவன், அவனுக்கு முன்பு எதுவுமில்லை, அவனே நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், அவனை யாரும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவும் எவரும் இல்லை. அவனைத் தவிர உள்ள அனைத்தும் இறுதிநாளன்று அழிந்து விடும். மரணத்திற்குப் பின் நாம் அவனிடமே மீளவேண்டியுள்ளது. அங்கு அல்லாஹ்வால் நாம் அநீதி இழைக்கப்பட மாட்டோம். நீதமாய் நடத்தப்படுவோம்.கடவுள்களாக கருதப்படும் படைப்பினங்கள் மனிதர்களால் வணங்கப்படும் கல், சிலை, சிலுவை, பிரமிடுகள், கோமேனி, ஃபாராகான், எலிஜாக்கள், மால்கம் , கிருஷ்ணா, குரு, புத்தர், மகாத்மா, சக்கரவர்த்தி, ஜோஷப் ஸ்மித், சு10ரியன், சந்திரன், ஒளி, நெருப்பு, சிற்பங்கள், கோவில்கள், ஞானிகள், பூசாரிகள், மடங்களில் வாழும் சன்னியாசிகள், திரைப்பட நட்சத்திரங்கள், ஷைக்குகள் ... ஆகியோர் அனைவருமே ஓரிறைவனின் படைப்பினங்களே!ஏன்! இறைத்தூதர்கள் கூட இறைவனின் படைப்பினங்கள் தான் (முஸ்லிம்கள் அவர்களை வணங்கவில்லை. மாறாக ஒரிறைவனையே வணங்குகின்றனர்). இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய் இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும் உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும் பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது: அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5) ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9) நம்மைப் போல் உண்பவர், நடப்பவர், உறங்குபவர், ஓய்வெடுப்பவர் முதலிய சராசரி மனித தேவைகளைத் தன்னகத்தே கொண்டவர் சர்வவல்லமை பொருந்தியவனைப் போல் ஒருபோதும் ஆகமுடியாது. அல்லாஹ் தன்நிகரற்றவன். படைப்பினங்களின் தன்மைகளை விட்டும் முற்றிலும் அப்பாற்பட்டவன். பௌத்தம், இந்துத்துவம், சௌராஷ்டரியம், மார்க்ஸியம், முதலாளித்துவம் இவையெல்லாம் படைப்பினங்களையும் உருவங்களையும் வணங்கும் கொள்கையுடையவைகள் தான். அமைதியையும் ஆன்மீகத்தையும் தேடியலையும் மாந்தர்கள்
இஸ்லாத்தைத் தவிர உள்ள அனைத்து மதங்களும் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவதில் வெற்றிடமாக இருக்கின்றன. முஸ்லிம்களைத் தவிர உலகில் வாழும் பிறமதத்தவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்தை வாழ்க்கை நெறியாக கருதுவதே கிடையாது. மதங்களை ஆன்மீக மருந்தாக மட்டுமே கருதி வருகின்றனர். இதனால் தாம் சார்ந்துள்ள மதத்தில் வாழ்க்கை நெறியுள்ளதா? என்று ஆராய்ச்சி செய்ய முற்படும் அறிஞர்களும், சித்தனையாளர்களும் அதில் தமது மதம் வெறுமையாக இருப்பதை உணர்கிறார்கள். அல்லது பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளைக் காண்கிறார்கள். மேலும் மனித சமுதாயத்தை உயர்வு, தாழ்வாக பிரித்து மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் சு10ழ்ச்சிகளையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் நடைமுறையோடு ஒப்புநோக்குகின்றார்கள். இவைபோக இம்மதங்களில் ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா? என்று பார்க்க முற்படுவோர் அரக்கத்தனமான காரியங்களையே ஆன்மீகமாக கருதும் உண்மையை உணர்கின்றார்கள். மேலும் ஆன்மீகப் போர்வையில் பலர் தம் பொருளாதாரத்தை சுரண்டுவதையும் கண்டு மிரண்டு நிற்கின்றார்கள்.எனவே வாழ்க்கை நெறியிலும் ஆன்மீகத் துறையிலும் சரியான விடை கிடைக்காத சிந்தனையாளர்கள் நிம்மதியையும் அமைதியையும் தேடி அலைகின்றார்கள். இதனால் தமது மதத்தை விட்டும் வெளியேறியவர்கள் பிறகு எந்த மதத்திற்கு செல்வது என்று தடுமாறி நிற்கும் போது பல மதங்கள் அவர்களை அழைக்கின்றன. தான் சார்ந்துள்ள மதத்தின் விரக்தியில் வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு சென்று விடவேண்டும் என்ற நோக்கில் சரியாக ஆராயாது பிற மதத்தில் நுழைவோர் அங்கு வேறுவிதமான தீமையையும் மடமையையும் உணர்ந்து நிம்மதியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் யாருக்கு இஸ்லாத்தை அறியும் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ, குர்ஆன் கிடைக்கின்றதோ அவர்கள் இஸ்லாமே சரியான தீர்வு என்ற உண்மையை உணர்ந்து அதில் இணைந்து நிம்மதியடைகின்றனர். இஸ்லாத்தின் வளர்ச்சியும் அதற்கெதிரான சூழ்ச்சிகளும்இஸ்லாம் தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளாலும் மனிதன் இறைவனைத் தவிர வேறு எதற்கும் எவருக்கும் அடிமையில்லை என்ற சுதந்திர சிந்தனையாலும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாலோ, நிறத்தாலோ, மொழியாலோ எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது என்ற சகோதரத்துவக் கொள்கையாலும் உலக மாந்தர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றது. திறந்த மனதுடன் குர்ஆனைப் படிப்பவர், இஸ்லாத்தின் போதனைகளைக் கேட்பவர், இஸ்லாத்தின் சட்டங்களை ஒழுக்கங்களை, வழிபாடுகளை சமூக ரீதியாக, அறிவியல் ரீதியாக, மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக ஆராய்ச்சி செய்பவர்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி அடைகின்றனர். இதன் எதிரொலிதான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் வெகுவிரைவாக வளர்ந்து வருகிறது. பல அறிஞர்களை, விஞ்ஞானிகளை, ஆராயிச்சியாளர்களை, வீரர்களை இஸ்லாம் தன்னுள் ஈர்த்துள்ளது. பலரை இஸ்லாத்தைப்பற்றி புகந்ழ்துரைக்கச் செய்துள்ளது. இஸ்லாத்தின் அதிதீவிர வளர்ச்சியை நன்கறிந்த மேற்கத்திய நாடுகள் தங்களின் அனைத்துச் செய்தித்துறைகளையும் இஸ்லாத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பலகோணங்களில் தவறாக விமர்சிக்க முயற்சிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூயவடிவை உலகிற்கு முன் எடுத்துரைக்கப்படும் போது அந்நாடுகள் தலைகுனிந்து நிற்கின்றன. இந்நிலை சத்தியத்தை நாடுவோருக்கு விடப்பட்ட மிகப்பெரியதொரு சவாலாகும். இஸ்லாத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களை நம்பிவிடாமல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை திறந்த மனதுடன் நேரடியாக குர்ஆனிலிருந்து பெற முயற்சித்தால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். அன்பான வேண்டுகோள்!மனிதன் படைக்கப்பட்டது ஒரு காரணத்திற்காகவே! அது, அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே! மனிதன் ஏன் இவ்வாறு செய்வதில்லை? நாம் சுவாசிக்கும் காற்றை நாம் படைத்தோமா? நம்மை நாமோ, அல்லது நாம் பிறரையோ படைக்கிறோமா? நாமோ இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம். நாம் சில வரம்புகளுக்குள்ளேயே வாழ்கின்றோம். நாம் பலவீனர்கள். சர்வவல்லமை பொருந்திய இறைவனை நமது தேவைகளைத் தருபவனை புறக்கணிப்பது சரியா? தயவு கூர்ந்து தனிமையிலோ, உங்கள் உற்ற நண்பருடன் கலந்தோ சிந்தித்துப் பாருங்கள்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனது செய்திகள் நமக்கு முன்னரே உலகின் அனைத்து பாகங்களிலும் சொல்லப்பட்டு விட்டன. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான். அவனது படைப்பினங்களில் அவனுக்கு யாதொரு குழப்பமுமில்லை. அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே! அதன் கோட்பாடும் ஒன்றே! ஏனெனில் அவன் ஒருவனே! அவன் பூவுலக மாந்தர்கள் கூறும் தத்துவங்களைக் காட்டிலும் மிக மேலானவன்.இஸ்லாம் என்பது சிறந்த வாழ்க்கைத் திட்டம். அது வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகிறது. இத்தனைச் சிறப்பம்சங்களும் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே மட்டுமே உள்ளன. இதன் விளக்கங்கள் குர்ஆனில் உள்ளன. அதனை திறந்த மனதுடன் படித்துப் பயன்பெறுவீர்! ஏனெனில் அல்லாஹ்வை விட சிறந்த முறையில் தெளிவாக எடுத்துக் கூறுவோர் எவருமில்லை. குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வஹீ (தூதுச் செய்தி) மூலம் அல்லாஹ்வால் அருளப்பட்டது. அவர்கள் அதனை எழுதவில்லை. மாறாக அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியாவார்கள். குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் நூல் விற்பனை செய்யும் கடைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டு மையங்களிலும் கிடைக்கும். காலம் தாழ்த்தாது அதனை வாங்கிப்படித்து இரட்சகன் நமக்கிடும் கட்டளைகளை அறிந்து வணக்கங்களை அல்லாஹ்க்கு மட்டும் செலுத்துவீராக!முடிவு உங்கள் கையில்.!

ஓன்றே குலம் ஓருவனே தேவன்

ஓன்றே குலம் ஓருவனே தேவன்         الإله واحد والإنسانية واحدة


1. படைப்பினங்களும் படைத்தவனும


படைப்புக்கள் பலவற்றை பார்க்கின்றோம். இவைகள் அனைத்தும் உலகெங்கிலும் ஒரேதோற்றம் கொண்டவைகளாகவே இருக்கின்றன. பூவுலகைச் சுற்றிலும் முகடாக நம் அனைவரையும் மூடியிருக்கும் வான விதானத்தைப் பாருங்கள்! வானம் இல்லாத இடத்தை இவ் வையகத்தில் எங்கேயாவது பார்க்க முடிகிறதா? வெப்பக் கதிர்களைக் கக்கிக் கொண்டிருக்கும் சூரியனைப்பாருங்கள்! மண்ணக படைப்பினங்கள் அனைத்தும் விண்ணகச் சூரிய வெப்பம் பெற்று புத்துணர்வுற்றுப்பிரகாசிக்கின்றன. அதே போன்று வான வீதி வழியே நிலவும் உலகில் உலாவந்து தன்னொளிகொண்டு இம்மானிலத்தை ஒளிரச்செய்கிறது. காற்றும் அவ்வாறே மானிட இனம் முதற்கொண்டு மண்ணில் இன்ன பிற உயிரினங்களுக்கும் உயிர் மூச்சாய் சுவாசக்காற்றாய் உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவை அல்லாத இன்னும் எத்தனை எத்தனையோ அரிய பெரிய படைப்பினங்களையெல்லாம் அன்றாடம் அகிலமெங்கும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்


ஊர்ந்து, ஊர்வலம் வரும் எறும்புகளிலிருந்து சேனைகளை அலங்கரிக்கும் யானைகள் வரை, சிறு மண்ணிண் துகள்களிலிருந்து மாமலையின் தொடர்கள் வரை, அவ்வளவு ஏன்? அருகம் புல்லிலிருந்து ஆலமரம் வரை எண்ணிலடங்காத படைப்புகள் இந்த மண்ணில் இருக்கின்றனவே. அத்தனை வியத்தகு படைப்புகளையெல்லாம் படைத்து பரிபாலித்து பரிபக்குவப்படுத்தி வருகிற மகத்தான படைப்பாளன் யார்? என்பது பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கின்றோமா? அப்படி சிந்தித்திருந்தால், சிந்தனையின் விளைவாக விளைந்த விடைதான் என்ன? அல்லது சிந்திக்கவில்லையென்றால்? மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்ற பகுத்தறிவு பெற்றிருந்தும் ஏன் சிந்திக்கவில்லை? ஒரு முறை! ஒரே ஒரு முறையாவது சிந்தித்துப் பார்த்தாலென்ன?


2. இயற்கையா? இறையாண்மையா?


சிலர் கூறித்திரிவது போன்று இயற்கைதான் இப்படைப்பினங்கள் அனைத்தையும் படைத்திருக்கின்றதே தவிர இறைவனென்று ஒன்றுமேயில்லை! என்று நீங்களும் கூறுவீர்களேயானால்? பிரித்தறியும் பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருத்தமற்ற விடை அது!


3. தானியங்கி உலகமா? இது இறைவனின்று இயங்குமா?


நீங்கள் முன்வந்து ஏதாவது ஒரு காரியத்தில் முனைந்து ஈடுபடாமலேயே தானாக அதுவாகவே என்றாவது நிகழ்ந்திருக்கறதா? நம்மிடம் இருக்கிற சின்னஞ்சிறு பொருளாக இருந்தாலும் கூட அதை நாம் அவ்விடத்திலிருந்து வேறிடம் நகர்த்த விரும்பினால் நாம் அதனை நகர்த்தாமலேயே தானாக அதுவாகவே நகர்ந்து விடுமா? குறைந்த படசம் இதுவே இயலாதென்றால் ? மாபெரும் கோளமாகிய சூரியன் நம்பார்வையில் கிழக்கிலிருந்து மேற்கே பயணிப்பது போல் தோன்றுகிறதே! அதேபோல் தேய்ந்து வளர்வது போல் தோற்றமளிக்கிறதே சந்திரபிம்பம்! இவைகளெல்லாம் வழிநடத்துவோனின்றி இயங்கிச் சுழன்றிடத்தான் இயலுமா? இயலவே இயலாது. இப்பெரும் கோளங்களையென்ன அளப்பெரும் உலகப்பந்தினையே உண்டாக்கிப் பரிபாலித்திட நிச்சயமாக ஒருவன் தேவை என்பதனை நாம் சந்திக்கின்ற மானிடரில் சிந்திக்கின்ற அறிவுடைய எவருமே மறுத்திடமுடியாது.


4. நாத்திகரே நாடிடும் சக்தி!


கடவுளையே மறுத்துரைக்கிற "நாத்திகவாதிகள்" கூட ஏதோ ஒரு சமய சந்தர்பத்தின் போது ஒரு மிகப்பெரிய சக்தியினை தங்களை அறியாமலேயே எதிர் பார்ப்பதும் உண்டு! எடுத்துக்காட்டாக தாங்க முடியாத வறுமை வந்து வாட்டுகின்ற போது அல்லது எதிரிகளால் துரத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறன்போது அல்லது தீராத நோயினால் பீடிக்கப்பட்டு வாடிப்போகின்றபோது ஒரு மறைவான மாபெரும் சக்தியின் போருதவியினை நாடிப்பரிதவிப்பது உண்டு! அப்படி தனது தாங்கு சக்தியே தோல்வி காணுகின்றபோது விரட்டிடும் துன்பத்தால் விரக்தியின் விளிம்புக்கே விரட்டப்படுகிறன்போது தேடித்தவிக்கின்ற சக்திதான் "கடவுள்" என்ற கண்ணியமான பெயர். ஆக "கடவுள்" என்றொருவன் இருக்கின்றான் என்பது சந்தேகமற்ற நிதர்சனமான உண்மை! விரிந்து பரந்த உலகில் ஒரு குறுகிய எண்ணிக்கையாளர்களே தவிர நாத்திகவாதத்தை நயந்து ஏற்றுக்கொள்வோரில்லை!


5. ஓரிறையா? ஒரு படையா?


அகில உலகில் அதிகமானோர் சர்வ சக்தானாகிய இறைவன் உண்டு! என்பதையே சரியென நம்புகின்றனர்! ஆனால்? அந்த இறைவன் யார்? அவனது தோற்றம் என்ன? அவன் ஒரே ஒருவன்தானா? அன்றி பலர்கொண்ட படையா? அவனது பண்புகள் என்ன? போன்ற விஷயங்களில்தான் வேறுபடுகின்றனர்.


நடு நிலையோடு சிந்தித்துப்பார்க்கிறபோது எந்த ஒரு நிறுவனமானாலும் ஒரே தலைமத்துவத்தின் கீழ் இயங்கினால்தான் அது பரிபூரண வெற்றி பெறமுடியும். ஒரு நிர்வாகத்திற்கு ஒரு தலைவர். ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஒரு தலைமை ஆசிரியர். ஒரு ஊருக்கு ஒரு பொறுப்பாளர். ஒரு நாட்டுக்கோ ஒரே ஜனாதிபதி. இப்படி ஒரே தலைமத்துவத்தின் கீழ் இயங்கும்போதுதான் ஒவ்வொரு நிர்வாகமும் உரிய பயனைப்பெறுகின்றது. பாருலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இத்தரணி தடுமாற்றமின்றி சரியாக இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு காரணகார்த்தாவாகிய இறைவன் ஏன் ஒரே ஒருவனாக இருக்கக்கூடாது? ஆம்! அப்படித்தான் இருக்கவேண்டும். இரு கடவுள்கள் இருக்குமாயின் இவ்வுலகம் எப்போதோ நிலை குலைந்து சிதைந்து அழிந்து போயிருக்கும். ஒரு கடவுள் ஒன்றை நினைக்க மறு கடவுள் மற்றொன்றை நினைக்க இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, ஒருவர் மற்றவரை வென்று தான் நினைத்ததை சாதித்து விடுவார். இந்நிலையில் தோற்கடிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியுமா? இப்படி தங்களுக்கிடையில் சண்டையிடும் இருவரால் சரிவர உலகினை இயக்கத்தான் இயலுமா? எனவே கடவுள் ஒருவனாக, ஒரே ஒருவனாகத்தான் இருக்க முடியும்!


6. வேதங்கள் கூறிவரும் போதங்கள்!


ஆதி மனிதன் ஆதாமை இறைவன் மண்ணிலிருந்து படைத்து அவருக்குத் துணைவி தேவை என்பதனால் அவரின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப்படைத்தான். அவ்விருவரிலிருந்துதான் உலகத்திலிருக்கும் ஓவ்வொரு மனிதனும் பிறந்திருக்கின்றான். திருக்குர்ஆன், பைபிள், இன்னும் இந்துக்களின் புராணங்கிளிலும் இந்த உண்மைகள் கூறப்பட்டிருக்கின்றன. இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டும் இருக்கின்றோம். நம்முடைய ஆதித்தாயும் தந்தையும் ஒன்றென்றால் அவ்விருவரையும் படைத்த அதே கடவுள்தான் நம் எல்லோரையும் படைத்திருக்க வேண்டும்.


7. ஒன்றிலிருந்து பல நூற


ஆனால் இன்று நாம் ஒவ்வொருவரும் தனக்கென்று தனித்தனி கடவுளர்களை வணங்குமளவுக்கு நிலை மாறியிருக்கின்றது. ஒரே வீட்டிலேயே பல கடவுள்கள் , தந்தைக்கு ஒரு கடவுள், தாய்க்கு வேறு ஒரு கடவுள், மகன் மற்றொரு கடவுளை நம்புகிறான், மகளோ இம்மூவரின் கடவுளர்களை மறுத்து புதிய கடவுளை நம்புகிறாள். இப்படி நாளுக்கு நாள் கடவுள்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.


8. அடி சறுக்கிடும் அறிவாளிகள்!


தன் கரங்களால் வடித்து வார்த்தெடுத்த சிலையே, தன்னை காத்து உதவும் கடவுளென கருதும் அளவுக்கு, அடிசறுக்கும் அறிவாளிகள் அதிகரித்து இன்று 21ம் நூற்றாண்டை நோக்கி இன்டிர்னெட் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கடவுள் நம்மை படைத்திருக்கின்ற போது,நாம் படைத்தவைகளே நமக்கெப்படி கடவுளாக முடியும்? "சிந்திக்கின்ற போதே சிரிப்பை சிந்தச்செய்கின்ற முரணான சித்தாந்தமல்லவா" இது! ஏன் நாம் எல்லோருமே ஒரே கடவுளின் படைப்புக்களாக இருக்கக்கூடாது? "மேலே கூறிய கருத்துக்களின் வழியே வலம் வருகிற போது ஒரே கடவுள் இருப்பதுதான் அறிவுப்பூர்வமானது ஆக்கப்பூர்வமானது" என்பது சந்தேகமற நிரூபணமாகிறது!


9. யார் அந்த ஒரிறைவன்?


ஒரே கடவுள்தான் இவ்வுலகத்தை பரிபாலிக்கின்றான் என்றால் அந்தக்கடவுள் யார்? கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசு கிறிஸ்துவா? அல்லது புத்தர்கள் வணங்கும் சித்தார்த்தரா? அல்லது முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹுவா? அல்லது இது அல்லாத மற்ற மதத்தவர்கள் வணங்கும் கடவுளர்களில் ஒன்றா? ஏதோ ஒன்றுதான் இவற்றுள் உண்மையான கடவுளாக இருக்க வேண்டும் அல்லவா?


10. மாண்டவனெல்லாம் ஆண்டவனா?


அன்புச் சகோதரர்களே!


இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள், மேலே கூறப்பட்ட கடவுள்களின் வரலாற்றைப் பார்ப்போம், உலகம் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முந்தியது. அதாவது இவ்வுலகத்தின் ஆரம்பத்தை யாரும் அறிந்ததில்லை, அதே போன்று இவ்வுலகத்தை படைத்த கடவுளுக்கும் ஆரம்பத்தை சொல்ல முடியாது, ஆதியும் அவனே அந்தமும் அவனே! ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்து இன்று 2009 ஆண்டுகளாகின்றது. அவர் பிறப்பதற்கு முன்பேயிருந்து இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்தால் அவர் பிறப்பதற்கு முன் இவ்வுலகத்தைப்படைத்து பரிபாலித்தது யார்? அவர் இவ்வுலகத்தை விட்டும் மறைந்ததற்குப்பிறகும் உலகம் இயங்கிக்கொண்டே இருக்கின்றது. இப்போது இவ்வுலகத்தை இயக்கிக்கொண்டிருப்பது யார்? இதே போல் பௌத்தர்கள் வணங்கிக்கொண்டிருக்கும் சித்தார்த்தரை பாருங்கள். அவர் இந்தியாவில் லும்பினி என்னும் இடத்தில் பிறந்தார், அவர் பிறந்ததற்கும் இறந்ததற்கும் வரலாறு இருக்கின்றது. வரலாற்றுக்குட்பட்டவர் வரலாற்றுக்கு முன் தோன்றிய உலத்தைப்படைத்திருக்க முடியுமா? "மரணித்தவர்" இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகத்தை பரிபாலிக்க முடியுமா? இதே போல் இந்துக்கள் வணங்கிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தெய்வங்களும் மிருகங்கள் உடபட மேலே கூறிய விதிக்குடாபட்டதே. இன்னும் இவை அல்லாமல் வேறு மதங்களில் வணங்கப்படும் ஏராளமான கடவுள்களின் நிலையும் இது போன்றதே!


11. இறைவனுக்கு இலக்கணம் இது போன்ற


இனி முஸ்லிம்கள் வணங்கும் கடவுளைப்பார்ப்போம். அவனுடைய பெயர் அல்லாஹ் அவன் எப்போது பிறந்தான், எப்போது மரணித்தான். என்கிற கேள்விக்கே இடமில்லை. ஆதியும் அவனே அந்தமும் அவனே. அவனுக்கு தாய் தந்தை கிடையாது. மனைவி மக்கள் கிடையாது. சொந்த பந்தம் இல்லை. அவன் எவருடைய தேவையும் அற்றவன், அவனுக்கு ஒப்பாக இவ்வுலகத்தில் எதுவுமே இல்லை. தூக்கம், பசி, களைப்பு, நோய், ஏமாறுதல் போன்ற மனிதனுக்கு ஏற்படும் சகல குறைவான தன்மைகளிலிருந்தும் தூய்மயானவன்தான் அல்லாஹ்.


இப்படிப்பட்ட தன்மையுள்ள ஒரே இறைவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதி பெற்றவனா? அல்லது மனிதனாகப்பிறந்து மனிதனுக்கு ஏற்படும் தூக்கம், பசி, களைப்பு, நோய், ஏமாறுதல் போன்ற பலவீன தன்மையுள்ளவர்களாக வாழ்ந்து மரணித்தவர்கள் கடவுளாக இருப்பதற்கு தகுதிபெற்றவர்களா? அறிவுப்பூர்வமாகவும் சற்று நிதானமாகவும் சிந்தியுங்கள். மேலே கூறப்பட்ட கடவுள்களில் ஒருவன்தான் கடவுளுக்கு தகுதியானவன் என்பதை உணர்வீர்கள்.


12. இறையோனை பலவீனனாக்கியது எங்ஙனம்?


அப்படி என்றால் இப்போது உலகத்தில் கடவுளர்களாக வணங்கப்படக்கூடியவர்களெல்லாம் யார்? எதற்காக அவர்களையெல்லாம் மக்கள் கடவுளாக மாற்றிவிட்டார்கள். ஆம் அதற்கும் தக்க பதில் இருக்கின்றது. அவர்களெல்லாம் நல்ல மனிதர்களாக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு நல்லுபதேசமும் பற்பல உதவிகளும் செய்தவர்கள். அவர்கள் மரணித்ததற்குப்பிறகு அவர்களை நாம் மறந்துவிடக்கூடாதென்பதற்காக அவர்களை கற்களால் சிலை வடித்தார்கள். மேலும் நன்மை செய்யும் மிருகங்கள் மற்றும் படைப்பினங்களையும் கடவுளாக்கினார்கள், அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினம் வரும்போதெல்லாம் அச்சிலைகளுக்கு மாலை சூட்டி அவர்களின் சேவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களைப் பாராட்டுவார்கள். இதைச்செய்தவர்கள் மரணித்த பிறகு அவர்களின் வாரிசுகள் அவர்கள் யார் என்பதையே தெரியாமல் அவர்களின் மீது தெய்வ பாக்தியைக்கொட்டி கோயிலும் கட்டி கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். இதுவே பல தெய்வங்கள் உருவாக முக்கிய காரணங்களாகும். இப்படிப்பட்ட கற்சிலைகள் கடவுளாக மாறுவதற்கு தகுதிபடைத்தவைதானா? இன்னும் நீங்கள் சிந்திக்காது ஸ்தம்பித்து நிற்பது ஏன்?


13. சிலை வழிபாட்டின் வீழ்ச்ச


பைபிளின் சாட்சியம


நாம் தேவனுடைய சந்ததியினராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கிய பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. (அப்போஸ்தலர்:- 17. 29)


ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே விக்கிரகாராதனையை விட்டும் விலகி ஓடுங்கள்.


(கொரிந்தியர்:- 10, 14)


பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களை விட்டும் விலகி உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.


யோவான் 1 5.21) (


பயப்படுகின்றவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர். அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.


(வெளி:- 21,8)


இதோ பைபிளின் சாட்சியத்தை கேட்டீர்கள் அல்லவா! அது சிலை வணக்கத்தை முற்றிலும் தடை செய்யவில்லையா? "யஹோவா" பிரிவினர்களைத்தவிர மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் அவர்களின் ஆலயத்துக்குள்ளும் வெளியேயும் சிலை வணக்கம் செய்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதனை சிறிதளவேனும் சிந்திக்கமாட்டீர்களா? இன்னும் இது போன்ற மேலதிக விபரங்களுக்கு எபேசியர்:- 5. 5 பேதுரு:- 4.3 போன்ற பல இடங்களை பார்வையிடுக.


14. பகவத்கீதையின் சாட்சியம


என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை அறியாத அறிவிலிகள் , புலன்களுக்கு எட்டாத என்னை. புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.


(பகவத்கீதை:- 7. 24)


என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தையும் நான் உயிர்களுக்கெலாம் ஈசாயாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர். (பகவத்கீதை: 9. 11)
கடவுள் ஒருவன்:
ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ (ரிக்வேதம்
மெய்ப்பொருள் ஒன்றுதான் அதை ஞானிகள் பலபெயரிட்டு அழைக்கின்றனர்

வேதங்களின் பிரம்ம சாத்திரம் கூறுகிறது:

ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்தே நாஸ்தே கின்ஜன்’ 
இறைவன் ஒருவனேவேறு எவரும் இல்லை;இல்லைவே இல்லை.

ஏகம் ஏவம் அத்விதியம்’ 
அவன் ஒருவனேஅவனுக்கு யாதொரு இணையுமில்லை.

யா இக் இத் முஸ்திஇ’ (ரிக் 6 : 45 :16)வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே

கடவுளை மனிதர்கள் பார்க்க முடியாது:
’பார்க்க அவன் மஹாத்மாகாணுதற்கரியவன்’  (.கீதை 7 : 19)

பகவான் கூறுகிறான்,

அர்ஜுனா ! சென்று விட்டனவும் நிகழ்வனவும் இனிவருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்ஆனால் என்னை எவனும் அறியான். (பகவத் கீதை 7: 24 – 26)

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை’ (அதர்வ வேதம் 32 : 3)

அவன் பிறக்கவில்லை:
அவன் ஆதி தேவன்பிறவாதவன்’ (பகவத்கீதை10 : 12)

அவனுடைய படைப்புக்களை வணங்கமுடியுமா?
யார் அசம்பூதி (இயற்கை)யை வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். (அதர்வ வேதம் 40 : 9)


இறந்த மனிதனின் புதைகுழியை சில சமயங்களில் மக்களில் சிலர் வழிபடுகின்றனர். காம உறவுச்சேவையும் கூட இருட்குணத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. அதுபோலவே இந்தியாவின் சில கிராமங்களில் பேய்களை வழிபடும் சிலர் இருக்கின்றனர். சில சமயங்களில


கடைத்தர இனத்தைச் சேர்ந்த மக்கள் வனங்களுக்குச் சென்று ஏதேனும் ஒரு மரத்தை வழிபட்டு அதற்கு பலிகளை செய்வதை நாம்இந்தியாவில் கண்டிருக்கின்றோம். இது போன்ற பல்வேறு விதமான வழிபாடுகள் எல்லாம் உண்மையில் தெய்வ வழிபாடு அல்ல.


(நம்பிக்கையின் பிரிவுகள்:- பதம்.4)






15. திருக்குர் ஆனின் சாட்சியம




மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அப்பகறா:- 2,21)




எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ அல்லாஹுவினாலேயே படைக்கப்பட்டவர்களையிற்றே! (அல் அஃராப்: 7. 191)




மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் காப்பாற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவேனும் பலஹீனர்களே.


(அல் ஹஜ்:- 22. 73)




அவர் கூறினார்! நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்? உங்களையும் நீங்கள் செய்த (இ)வற்றையும் அல்லாஹ்வே படைத்திருக்கின்றான் (அஸ் ஸாஃப்ஃபாத்:- 37 .95.96)




நபியே!) நீர் கூறுவீராக அவன் "அல்லாஹ்" ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன) அவன் எவரையும் பெறவில்லை (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.


( அல் இக்லாஸ்:- 112 1.4)


சிந்திப்பீர் சீரான வழி அடைவீர


ஆகவே அறிவுப்பூர்வமான முறையில் சிந்தித்து நீங்கள் வணங்கும் கடவுளை தெர்வு செய்யுங்கள். அதுவே அறிவுள்ளவர்களின் அடையாளமாகும் . இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.


=========================================================================
##################################################################################
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16