வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

முஹம்மத் - யார் இவர்?

இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய உலக மக்களின் தேடல்கள் அதிகரிப்பதையும், அதன் மூலம் உண்மையை உணர்ந்து, தெளிந்து, முன்பை விட கூடுதல் அளவில் இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் புள்ளி விபரங்கள் பறை சாற்றிக் கொண்டே இருக்கின்றன.
இவ்வகையில், உலகமெங்கும் முஸ்லிம்கள் இம் மனிதரை ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தன? என்ற பிற மத சகோதரர்களின் புருவ உயர்த்தல்களுக்கு விடை தரும் அவசியங்கள் அழுத்தமாக பல இஸ்லாமிய அழைப்பு மையங்களுக்கு ஏற்பட்டு, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுள்ளன.

உயிரினும் மேலான இறைத் தூதர் மீதான அவதூறுகளைக் கண்டு நபியவர்கள் மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய எதிர்ப்புகளில், காழ்ப்புணர்வுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பொதுமக்கள் எவ்வகையிலும் துணுக்குறக் கூடாது என்றும் - வெறுமனே உணர்ச்சிவசப் படல்களுக்கு இடம் கொடுக்காமல், இன்றைய சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? ஆற்ற வேண்டிய எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims) என்ற தலையங்கத்தில் பட்டியலிட்டிருந்தோம்

மேற்கண்ட தலையங்கத்தில், ஒவ்வொரு முஸ்லிமின் சொல்லிலும், செயலிலும் நபி(ஸல்) காட்டித் தந்த இஸ்லாம் சுகந்தமாய் வீசி "அழைப்பு" தர வேண்டும் என்று வேண்டுகோளிட்டிருந்தோம். இத்தகைய சுகந்தத்தை தினசரி சந்தித்துப் பேசும் நட்பு வட்டாரத்தில், அண்டை வீட்டார்களிடத்தில், அலுவலக வட்டத்தில், வியாபார நிறுவனங்களில் என தினசரி பரவச் செய்து கொண்டிருக்கும் தூய எண்ணம் கொண்ட சகோதர சகோதரிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
ஓட்டமும் நடையுமாக இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்படும் இத்தகைய அழைப்புப் பணிகளில் அன்பளிப்பாக தருவதற்கென்றே ரத்தினச் சுருக்கமாக, இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பற்றி சுருக்கக் கையேடு ஒன்றினைத் தமிழில் தயாரித்து இணையத்தில் பரவச் செய்திருக்கும் ஓர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இக் கையேட்டினை பிரதி எடுத்து பிற மத நண்பர்களுக்கு விநியோகிக்கலாம். இயலாதோர் மின் அஞ்சலில் அனுப்பலாம். அனுப்பித் தந்த கையோடு சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்கக் கோருங்கள்.. இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்?" என்ற கேள்விக்கு அவர்களின் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...


















































இப் பிரசுரத்தை அழகிய முறையில் அமைத்திருக்கும் இஸ்லாமியப் பெண்மணி தளத்தினருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதல் தகவல்கள் மற்றும் அச்சிட்ட பிரசுரங்களைப் பெற்றுக் கொள்ள admin@islamiyapenmani.com எனும் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்






மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16