ஏகத்துவம்
இறைவன்
அனைத்துலகையும் படைத்தவன் அல்லாஹ் ஆவான். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வின் அறிவுக்கும் வல்லமைக்குமான சான்று களாக விளங்குகின்றன. மனிதனின் அகவய-புறவய அம்சங்கள், உயிரினங்கள், வித்துகள், புற்பூண்டுகள், நட்சத்திரங்கள் முதலிய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வின் வல்லமையும் இருப்பும் ஊர்ஜித மாகின்றன. பிரபஞ்ச சிருஷ்டிகளின் ஆழ அகலங்கள் பற்றி அதிகமாக சிந்தனை செய்வதன் மூலமாக இறைவனது மகிமை, சக்தி, அறிவு நுட்பம் முதலானவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
மனிதனது அறிவும் சிந்தனையும் அதிகரிக்கின்ற போது, அல்லாஹ்வினது அறிவு, நுட்பம் மற்றும் வல்லமை பற்றிய புதிய சான்றுகள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. சிந்தனை விருத்தியும் ஏற்படுகின்றது. இச்சிந்தனையே, மனிதர்கள் தினந்தோறும் அல்லாஹ்வை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக அமைவதுடன், அவனளவிலான நெருக்கத்திற்கு வழிவகுக்கும் சிறப்பம்ச மாகவும் அமைகின்றது.
அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது
''முஃமின்களுக்கு பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?| (51:20,21)
''நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப் பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது சாய்ந்த வண்ணமும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்புகளைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவைகளை வீணாகப் படைத்து விடவில்லை| எனவும் கூறுவார்கள்.||(3:190,191)
அவனது பண்புகள் (சிபத்துகள்)
அல்லாஹ், அனைத்து விதமான குறைபாடுகளை விட்டும் தூய்மையானவனாவான். அவன் பரிபூரணமானவன். உலகில் காணப்படும் எல்லாவிதமான சிறப்புகளும் பண்புகளும் அவனிடமிருந்தே உருவாகியிருக்கின்றன.
''அல்லாஹ் எத்தகையவனென்றால், அவனைத் தவிர, வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை. அவன் தான் உண்மையான பேரரசன். பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், அபயமளிப்பவன், கண்காணிப்பவன், யாவரையும் மிகைத்தவன், அடக்கியாளுபவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன், அல்லாஹ், படைப்பவன். அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன். அவனே படைப்பினங்களின் உருவத்தை அமைப்பவன். அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான்.'(59: 23,24)
அவன் முடிவில்லாதவன்
அல்லாஹ் சகல விடயங்களிலும் வரையறைக்கு உட்படாதவனாக இருக்கின்றான். அவனது அறிவு, சக்தி, வாழ்வு அனைத்துமே முடிவற்றவையாகும். இதன் காரணமாக இடம், காலம் போன்ற வரையறைகளுக்கு உட்படாத பண்பு ள்ளவனாக அல்லாஹ் இருக்கின்றான். ஏனெனில், இடம் காலம் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு வரையறை இருக்கின்றது. ஆனால், அல்லாஹ்வோ எல்லா காலதேச வர்த்தமானங்களையும் கடந்தவனாகவும் அவற்றை மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
''வானத்திலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன்;;;. பூமியிலும் அவனே வணக்கத்திற்குரிய நாயன். அவனே தீர்க்கமான அறிவுடையவன், யாவற்றை யும் மிகைத்தவன்.||(43:84)
''நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்ப வற்றை நன்கு பார்க்கின்றவன். (57:04)
வாஸ்தவத்தில் இறைவன் நமக்கு நம்மை விடவும் மிக நெருக்கமாக இருக்கின்றான். அனைத்து இடங்களிலும் அவன் வியயாபித்து இருக்கின்றான். ஆனால், எந்நிலையிலும் அவனுக்கென்று பிரத்தியேக இடமொன்று கிடையாது.
''மேலும், நாம் உயிர் நரம்பை விட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம்.|| (50:16)
''முதலாமவனும் கடைசியானவனும் அவனே. அந்தரங்க மானவனும், வெளிப்படையானவனும் அவனே. மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன்.|| (57:03)
குர்ஆனின் சில வசனங்களில், அவன் அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்.||''ரஹ்மான் அர்ஷின்'' மீது நிலைகொண்டான்||முதலான கருத்துகள் தொனிக்கின்றன. அரபு மொழியில் அர்ஷ் எனும் பதம் சிம்மாசனத்தைக் குறிக்கவும் பயன்படுகின்றது. ஆயினும், இவ்வசனங்கள் அல்லாஹ் வுக்கு ஒரு பிரத்தியேக இடத்தை அடையாளப் படுத்துவதாகவோ, ஒரு சிம்மாசனத்தை அவனுக்கான இருப்பிடமாக இனங்காட்டுவதாகவோ இல்லை. முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதற்கு அப்பாற்பட்ட ஆத்மீக உலகங்கள் மீதும் வியாபித்திருக்கும் இறையாட்சியையே அவை குறிக்கின்றன. ஏனெனில், அல்லாஹ்வுக்கு இடம் உண்டென்று கூறும்போது, அவனும் வரையறைக்கு உட்பட்டவனாக மாறிவிடும் நிலை ஏற்படுகின்றது. இடம் எனும் வரையறைக்குள் குறுகி விடுவது படைப்பினங்களின் பண்பாகும். படைப்பாளனோ படைப்பினங்களை ஒத்தவனாக இல்லை.
அதேவேளை,''அவனைப் போன்று ஒன்றுமில்லை(42:11),அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை(112:4) போன்ற வசனங்கள், அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற உயர் நிலையை சுட்டுவனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவன் உருவமற்றவன்
அல்லாஹ்வை கண்களால் காண முடியாது என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், ஒரு பொருளை கண்களால் காண முடியுமாக இருப்ப தென்பது, குறித்த பொருளுக்கு உருவம், இடம், நிறம், தோற்றம், திசை முதலான பண்புகளை அடையாளப் படுத்தும் சான்றாக அமைகின்றது. இவை சிருஷ்டிகளின் பண்புகளாகும்;. ஆனால் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் பண்புகளோ, அவனது படைப்புகளின் பண்புகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டனவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தனவுமாகும்.
இதன்படி, அல்லாஹ்வைக் கண்களால் காண முடியும் என்று நம்புதலானது இணைவைப்பில் (ஷிர்க்) எம்மைச் சேர்த்து விடும் அபாயம் கொண்டது.
பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகின்றான். அவன் நுட்பமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (06:103)
பனூ இஸ்ராயீல்களில் சிலர் நபி மூஸாவிடம் வந்து, ''மூஸாவே! நாம் இறைவனைக் கண்ணால் காண்கின்ற வரை, உம்மை விசுவாசங் கொள்ள மாட்டோம்|(2:55) என்று தர்க்கம் புரிந்தார்கள். மூஸா நபியவர்கள் அக்குழுவினரை அழைத்துக் கொண்டு தூர்சீனா மலைக்குச் சென்று அவர்களது வேண்டுகோள் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்விடமிருந்து பதில் வந்தது
மூஸாவே! ஒரு போதும் நீர் என்னைப் பார்க்க முடியாது. எனினும் இம்மலையை நீர் பார்ப்பீராக. அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்.||
அதன்படி அவர்களது இரட்சகன் அம்மலை மீது வெளிப்பட்ட போது, அது அம்மலையை தூள்தூளாக்கி விட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர், அவர் தெளிவுபெற்று எழுந்த போது, அல்லாஹ்விடம் 'நீ மிகப் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகின்றேன். இன்னும் நான் முஃமின்களில் முதன்மையானவன்|என்றும் கூறினார். (07:143-9)
அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்ற இவ்வரலாற்று நிகழ்வு, மனிதர்கள் அல்லாஹ்வைக் காண்பதென்பது சாத்தியமற்றது என்பதற்கு சிறந்த சான்றாகும். சில அல்குர்ஆன் வசனங்களிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வைக் காண முடியும் என்ற கருத்தை தொனிக்கும் கூற்றுகள் காணப்படினும், அவை அகக் கண்களால் அல்லாஹ்வை அடைய முடியும் என்பதையே சுட்டுவதாக அமைந்துள்ளன என்பது தெளிவு. ஏனெனில், குர்ஆன் வசனங்கள் எப்போதும் ஒன்றையொன்று முரண்பட்டு நிற்பதில்லை. மாறாக ஒன்றை மற்றொன்று விளக்குவதாகவே அமைகின்றது
ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து ஒரு மனிதர், ''அமீருல் முஃமினீனே! எப்போதாவது தங்களது இறைவனைக் கண்டதுண்டா?|| என வினவியபோது, ''காணாத ஒருவனை வணங்குவேனா?||எனக் கூறிவிட்டுச் சொன்னார்கள்: ''ஒருபோதும் கண்கள் அவனை வெளியோட்டமாக காணமாட்டாது. ஆனால், உள்ளங்கள், ஈமானின் யதார்த்தத் தன்மையால் அவனைக் கண்டுகொள்கின்றன.|| (நஹ்ஜுல் பலாகா - குத்பா – 179)
மனிதர்களின் பண்புகளை அல்லாஹ்வில் கற்பனை செய்வதும் இடம், காலம், திசை, உருவம் போன்றவற்றை அல்லாஹ்வுடைய இயல்புகளென நம்புவதும் அல்லாஹ்வை அறிவதிலிருந்து தூரமாவதற்கும் ஷிர்க்கினால் அழுக்காவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அல்லாஹ் மனிதர்களுடைய பண்புகளை விட உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் மட்டுமன்றி தன் சகல விடயங்களிலும் ஒப்புவமை யற்றவனாகவும் இருக்கி ன்றான்.
தவ்ஹீத்: இஸ்லாத்தின் ஜீவநாடி
தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பற்றிய அறிவு, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் விடயத்தில் மிக முக்கிய மான அம்சமாகும். தவ்ஹீத், மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்று எனக் கருதுவதை விட அதுவே அனைத்து மார்க்கக் கோட்பாடுகளினதும் மூல உயிராக இருக்கின்றது என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய அடிப்படைகளும் அதனையொட்டிய பிரிவுகளும் தவ்ஹீதிலிருந்து தான் தோற்றம் பெறுகின்றன. அல்லாஹ் ஒருவன், நபிமார்களின் அழைப்பு (தஃவா) ஒன்று, இறைமார்க்கம் ஒன்று, கிப்லா ஒன்று, இறைவேதம் ஒன்று, அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் ஒன்று, முஸ்லிம்களின் அணி ஒன்று, இறுதியில் மீளும்; மறுமை நாளும் ஒன்றே என இந்த ஒருமை எங்கும் விரவிக் காணப்படுகின்றது.
இதனாலேயே, ஏகத்துவத்திலிருந்து ஷிர்க்கை நோக்கிச் செல்வதை மன்னிக்க முடியாத பாவமென இஸ்லாம் கருதுகின்றது.
''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ, அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார்.|| (04:48)
''நீர் இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக, நீர் நஷ்ட வாளிகளில் ஆகிவிடுவீரென உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப ;பட்டது.|| (39: 65