வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்: சம்பந்தபட்ட 68 குற்றவாலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்?

 Liberhan Report: Fringe benefits for every party?
 

லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்: சம்பந்தபட்ட 68 குற்றவாலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் வீரப்ப மொய்லி அறிவிப்பு.

 
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தகர்க்கப்பட்ட பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இச்சம்பவத்திற்கு 68 குற்றவாலிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“லிபரான் ஆணையத்தின் எந்தப் பரிந்துரையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “ விசாரணை ஆணையம் பரிந்துரைகளையும் தாண்டி அரசு செல்லும்” என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.

“பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உண்மைகளை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அவைகள் மீது ஒவ்வொரு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில் தான் நடவடிக்கை தொடர்பான விவர அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய மொய்லி, “நடவடிக்கை அறிக்கையில் 68 பேர் பாபர் மசூதி இடிப்பிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பது குறித்தும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது, இவைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

லிபரான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 68 பேரின் பட்டியல்:
1. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)
2. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)
3. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
4. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
5.அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
6. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
7. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
8. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
9. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
10. பால் தாக்கரே (சிவசேனா)
11. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
12. பரம் தத் திவிவேதி (உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்)
13. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)
14. தாவு தயால் கன்னா (பாஜக)
15. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
16. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)
17. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)
18. ஜி.எம்.லோதா (பாஜக)
19. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)
20. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)
21. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)
22. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)
23. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)
24. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி. மாநில தலைவர்)
25. கல்யாண் சிங் (உ.பி. முதல்வர்)
26. குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்)
27. லால்ஜி தண்டன் (உ.பி. மின்துறை அமைச்சர்)
28. லல்லு சிங் செளஹான் (பாஜக அயோத்தி எம்எல்ஏ)
29. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
30. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)
31. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)
32. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)
33. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)
34.மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)
35. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
36. ஓம் பிரதாப் சிங்
37. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)
38. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
39. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
40. பிரபாத் குமார் (உ.பி. உள்துறை முதன்மை செயலாளர்)
41. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)
42. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)
43. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்எஸ்எஸ் தலைவர்)
44. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)
45. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)
46. ஆர்.கே.குப்தா (உ.பி. நிதியமைச்சர்)
47. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
48. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)
49. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர். இப்போது காங். மத்திய அமைச்சர்)
50. சதீஷ் பிரதான் (சிவசேனா)
51. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)
52. சிதா ராம் அகர்வால்
53. கெளர் (மாவட்ட ஆணையர்)
54. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)
55. சூர்ய பிரதாப் சாகி (உ.பி. அமைச்சர்)
56. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
57. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
58. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
59. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)
60. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)
61. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)
62. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
63. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
64. விஜயராஜே சிந்தியா (பாஜக)
65. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)
66. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)
67. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
68. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , பாஜக மூத்த தலைவர் அத்வானி சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 11 அதிகாரிகளும் அடக்கம். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேர்
இப்போது உயிருடன் இல்ல
இனியானவது சட்டம் கடமையை செய்யுமா?
 
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16