இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது.''அவ்தார்" என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ''கீழே இறங்கி வருதல் "எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் இந்து இதிகாசாங்கள் படி கடவுள் பூமிக்கு உடல் உருவம் கொண்டு இறங்கி வருதல் எனப் பொருள். சுருக்கமாக கடவுள் பூமிக்கு ஏதேனும் உருவம் கொண்டு இறங்கிவருதல் என உணரலாம். இந்து மத விசுவாசப் படி கடவுள் மதத்தைப் பாதுகாக்க நீதியை நிலை நாட்ட சட்டங்களை அமுல் படுத்த மனித சமுதாயத்துக்கு உணர்த்த சில உருவங்களில் அவதாரம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார் என்பதாகும். வேதங்களில் அவதாரங்கள் பற்றி எந்த குறிப்பீடுகளும் இல்லை. குறிப்பாக ஸ்ருதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்ருதிகளில் அவதாரங்கள் குறித்த செய்திகள் உள்ளன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதராங்கள் பற்றிய செய்திகள் மலிந்து காணப்படுகின்றன. பகவத் கீதையில் 4ம் பக்கம் ஸலோகம் 7-8 கூறுகிறது. எங்கெல்லாம் அநீதி தலை தூக்கி தர்மம் சரிகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் இறங்குவேன் என கடவுள் கூறுகிறார். நீதியை நிலைநாட்ட, அநீதியை ஒழிக்க, மார்க்க சட்டங்களை நிலை நிறுத்த நானே பூவுலகுக்கு வருவேன். ஆக பகவத் கீதையின் பிரகாரம் கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். பூமியின் நீதியை நிலைநாட்டி, அநீதியை அகற்றி மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்த கடவுளுக்கு அவதாரம் தேவைப்படுகிறது. புராணங்களின் படியே கடவுள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததை அழகுபடக் கூறுகிறது. விஷ்ணு பகவான் (ஜீவராசிகளை இரட்சித்து உணவு வழங்கும் கடவுள்). பத்து அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அவையாவன
1) மதஸ்ய அவ்தார் – மீன் அவதராம்
2) குர்ம் அவ்தார் – ஆமை அவதாரம்
3) வரஹ் அவ்தார் – பன்றி அவதாரம்
4) நரஷிம்ம அவ்தார் – பாதி மனிதன் பாதி சிம்ம அவதராம்
5) வாமண அவ்தார் – பிராமன் அவதாரம்
6) பரஷுராம் அவ்தார் – பரசுராமன் அவதாரம்
7) ராம் அவ்தார் – ராமரின் (ராமாயண) அவதாரம்
8) கிருஷ்ணா அவ்தார் – பகவத் கீதையின் கிருஷ்ணர் அவதாரம்
9) புத்த அவ்தார் – கெளதம் புத்தரின் அவதாரம்
10) கல்கி அவ்தார் – கல்கியின் அவதாரம் (ஆதாரம்: ரிக் வேதம் சம்ஹித் பாகம்-12 பக்கம் 4309 ஸ்வாமி சத்ய பிரகாஷ் சரஸ்வதி)
ஆக வேதங்களிலிருந்து கூறும் சத்தியப் பாதையிலிருந்து கொஞ்சம் கொச்சமாக உண்மைக்குப் புறம்பான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அவதாரங்கள் இவைகள் தாம்.