1. மனிதனைப் புரிந்து கொள்ள கடவுளுக்கு மனித உருவெடுக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மதஙகள் பூமிக்கு கடவுளின் மனித உருவ வருகையை நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கு சரியான மனோதத்துவ முறைப்படியான சமாதானத்தை அம்மதங்கள் கூறுகின்றன சர்வ வல்லமை படைத்த கடவுள் அதிக புனிதமானவன். எனவே அவனுக்கு கடினங்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள், பின் விளைவுகள் (மனிதனுக்கு நேர்பவை) பற்றிய அனுபவங்கள் சிந்தனைகளை அவன் அறியமாட்டான். ஒரு மனிதன் மனவேதனையின் போது எப்படி சிரமப்படுகிறான் என்பதை கடவுள் அறியமாட்டார். எனவே துன்பக் கடலில் நீந்தும் மனித சமுதாய மத்தியில் மனித உருவில் தோன்றி மனிதனின் குறை நலன்களுடன் கூடிய கடவுள் மனித அவதாரம் எடுத்து வருகிறார் என மிக லாவகமாக அவதாரங்களை நியாயப்படுத்கின்றன புராணஙய்கள்.
2. படைப்பவர் உபயோகிக்கும் முறை தயார் செய்தல்: ஒரு டேப் ரிக்கார்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர் (படைப்பவர்) அதனை இயக்குவது எவ்வாறு? எந்த பட்டனை அழுத்தினால் ஒலி நாடா முன்பாக செல்லும், பின்னால் செல்லும், நிற்கும், , இயங்கும்,பாடும் மற்றும் பதிவு செய்யும் என்ற செய்முறைகளைத் தெரிவிக்கும் ஒரு விபரத்தை கருவியுடன் சேர்த்து தருவார் அந்த விபரத்தில் என்னென்ன செய்யக் கூடாது? என்று முழுவிபரங்களும் அதில் இருக்கும். இந்த டேப் ரிகார்ட்ரைத் தயாரிப்பவர், அதற்காக டேப்ரிகார்டர் அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குரிய செயல்முறைகளை விவரித்து ஒரு பிரசுரம் கருவியுடன் வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தான். அத்தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான். அவ்வாறு இறக்கியருளப்பட்ட இறுதி நபிக்கு இறங்கிய இறை வேதமே குர்ஆன் படைத்த இரட்சகனால் வாழும் முறையையும் அவ்வாழ்வின் சுவையை இனிமையுடன் சுவைக்கும் மறுமைப் பேற்றையும் தவறினால் கிட்டும் நரகவேதனையையும் விவரமாக விளக்கும் வாழ்க்கை நடைமுறைத்திட்டமே அருள் மறை குர்ஆன் எது நல்லது? எது கெட்டது? எனப்பிரித்தறிவிக்கும் அல்லாஹ்வின் செய்முறை விளக்கமே குர்ஆன். கடவுளே மனித உருவில் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மனித சமுதாயத்தில் கடவுளுக்கு எவர் விருப்பமானவரோ அவரை கடவுள் தன் இடத்துக்கு தேர்வு செய்து அவரைத் தூதராக்கி அவர் மூலமாக தான் நாடும் செய்திகளைத் தன் படைப்பினங்கள் வரை கொண்டு சேர்க்கும் திறன் கடவுளுக்கு உண்டு அவ்வாறு கடவுளால் தேர்வு செய்யப்பட்ட மனித சமுதாயத்தைச் சார்ந்த தூதர்களே இறைத்தூதர்களாவார்கள்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)
இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.