மரணத்துக்குப் பின் மறுபிறவி எடுத்தல், திருஅவதாரம் எடுத்தல் (தெய்வமாகுதல்) பிற உடலில் புகுந்து மீண்டும் ஜன்மம் எடுத்தல் ஆகியவை இந்து மதத்தின் சித்தாந்தமாகும். மறுபிறவி பற்றிய இந்து மதக்கோட்பாட்டில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகவே இப்பிறவியில் பிறக்கும் குழந்தைகள் அழகுடன் அல்லது அங்கஹீனமாக பிறக்கின்றன (கர்மம்) அது போன்ற கருக்துக்களும் இந்து மதச் சித்தாந்தத்தில் உண்டு.
பகவத்கீதை அத்தியாயம் 2, ஸ்லோகம் 22 கூறுகிறது. புத்தாடை அணியும் ஒருவன் பழைய ஆடையை விட்டுவிடுவது போன்று ஆன்மா புதிய உடலை ஏற்றுக் கொண்டு பழைய உடலை (உபயோக மற்றதை) விட்டு விடுகிறது.
மறுபிறவி சித்தாந்தத்தை ‘ப்ரக தரண்யா உபநிஷம் பாகம்’ 4 அத்தியாயம் 4 சுலோகம் 3 கூறுகிறது. ஒரு கம்பளிப்பூச்சி புல்லின் மேல் நுனியை வளைத்து நெளித்து ஓடித்துவிட்டால் அதிலிருந்து புதிய மேல்பாகம் முளைப்பிப்பது போல் ஒரு உடலிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா மற்றொரு உடலில்புகுந்து விடுவதால் திருப்தியுறுகிறது. கர்மம்(கர்மா)-காரணமும்விளைவிக்கும் வினை அவனது மனநிலையை எண்ணத்தைச் சார்ந்தது. இதற்கு கூறும் விளக்கம். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினைஅறுப்பான். கோதுமை விதைத்தவன் எவ்வாறு அரிசியை அறுவடை செய்ய இயலாதோ அதுபோல இவ்வுலகில் செய்யும் நல்லறங்களின் கூலியை மறுபிறவியில் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்க மளிக்கப்படுகிறது.
ஒருவர் புரியும் நல்லசெயல்கள் ''தர்மா" என அழைக்கப்படுகிறது. ஆகசிறந்த நல்லறங்கள் (கர்மங்கள்) புரிபவர் மறுபிறவியில் அதன் பலனை நுகர்ந்து கொள்வார். கெட்ட காரியங்களைச் செய்பவர் செய்த கர்மத்தின் விளைவை மறுபிறவியில் கண்டு கொள்வார். ஆக நல்ல, கெட்ட அறங்கள் இவ்வுலக வாழ்வில் அனுபவிப்பதோடு மறுபிறவியிலம் அதன் பாலை நுகர்வர் என்பது இச்சித்தாந்தத்தின் சுருக்கம்.
மோட்சம் (மறுபிறவியிலிருந்து விடுதலை)
மோட்சம் என்பது மறுபிறவி போன்ற மீண்டும் ஜன்மம் எடுக்காமல் முக்தியடைவது இதனை ''சம்சாரா" எனக்கூறுவர். இந்து மத நம்பிக்கைப் பிரகாரம் ஒரு நாள் மறுஜன்மம் எடுக்கும் இந்நிலை முடிவுறும். அதாவது அந்த படைப்பினத்தின் மறுபிறவி எடுத்து தீர்க்கக் கூடிய எந்த கர்மமும் பாக்கி இல்லாது இருந்தால் மறுபிறவி எடுக்க மாட்டான் என்பது இதன் பொருள் மறு பிறவி(மீண்டும்) பிறவி (ஜன்மம்) எடுத்தல் வேதங்களில் குறிப்பிட படவில்லை. அதுபோன்று ஆன்மாக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிவேசிக்கும் எந்தக் கருத்தும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.