உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)
படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.
மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)
இதனை அரபியில் "ஜன்னத்" என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால், தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.
இதனை அரபியில் "ஜஹன்னம்" என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)
சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ''சுக்ரிதம் யு லோகம்" என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.
சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6
இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய், தேன், சுத்தமான நீர், பால், தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வணவேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.
சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ''நரக ஸ்தானம்" என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.