வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

அ.மார்க்ஸ் “ நான் புரிந்து கொண்ட நபிகள்”

                                              


முஹம்மதை ஏன் நபியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வினாவுக்கு முஹம்மதை நபியாக ஏற்றுக் கொள்வது ஈமானின்பாற்பட்டது என்று கூறலாம். மறுமை, மலக்குகள், வேதங்கள் என்ற விடயங்களில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு முஹம்மதை இறுதி நபியாக ஏற்றுக்கொள்வது கடமையாகும். அதை ஏற்காது போனால் ஷிர்க்காக மாறும். ஆனால் இவை அனைத்துக்கும் முன்னால் அல்லாஹ்வை நேசிப்பது முதன்னிலை பெறுகிறது. அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது. அற்ப முகஸ்துதிகூட இணைவைத்தலின் ஒரு பகுதியே. இறைவனுக்குப் பூரணமாக வழிப்படும் முஸ்லிம் இணைவைக்கக் கூடாது. இந்த இடத்தில் நபியின் மீதான அன்பை எப்படி வைப்பது? அவரைப் பரம்பரை அடிப்படையில் விசுவாசிப்பதா? அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் நம்புவதா? என்ற வினா எழுகிறது.









“விசுவாசிகளே! அல்லாஹ்வுடைய ரஸுலுடைய கருத்துக்கு முன்னால் எந்தக்கருத்தையும் முற்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். அல்லாஹ் கேட்பவன், அனைத்தையும் அறிபவன். விசுவாசிகளே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேலே உயர்த்தாதீர்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர் சப்தமிட்டுப் பேசிக்கொள்வதைப் போல அவருக்கு முன்னால் பேசாதீர்கள். நீங்கள் உணராமலேயே உங்களுடைய செயல்கள் பயனற்றுப் போய்விடும்.’’ (49:1-2)







இந்த வசனம் நபித்தோழர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டை கற்றுக் கொடுக்கின்றது. அல்லாஹ்வுடைய ரஸூலுடைய கருத்துக்கு முன்னால் எந்தக் கருத்தையும் முற்படுத்தக் கூடாது. அதேநேரம் தனது கருத்தை நிறுவ குரலை உயர்த்தக் கூடாது என்று குரல் கட்டமைக்கும் அதிகாரத்தையும் இவ்வசனம் உணர்த்துகின்றது. ஒரு விசுவாசி தன்னைவிட தனது நபியை மேலாக மதிக்க வேண்டும் என்ற கருத்தையும் அல்குர்ஆன் மற்றோர் அத்தியாயத்தில் கூறியுள்ளது. இந்த வசனங்கள் நபிகளார் உயிரோடு இருக்கும் போது தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் அதே நோரத்தில் பிற்காலத்தில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திற்காக உழைக்கும் தலைமைத்துவங்களை எவ்வாறு மதிக்கவேண்டும் என்பதையும் சுட்டுகிறது. உலக வரலாற்றில் கார்ல் மார்க்ஸ், லெனின், சேகுவேரா, மாஓசேதுங், அம்பேத்கார், பெரியார், காந்தி போன்ற தலைவர்களுக்கு சாதாரண மனிதர்கள் தியாகம் செய்வதற்கு முன்வந்தார்கள். இதைவிட ரஸுலுல்லாஹ்வை ஒரு முஸ்லிம் ஆழமாக நம்ப வேண்டும். ஏனைய உலக தலைவர்களைவிட அவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்பதை ஆழமாக படிக்கும் போதுதான் அவர்மீது உண்மையான பற்றுத் தோன்றும்.







அவர்மீது பற்றுக் கொள்வது அல்லாஹ்வின் பற்றோடு சமப்பட்டுவிடக் கூடாது இதற்கும் நபிகளாரைப் பற்றி மிகச்சரியாக புரிந்து கொள்வதும் அவசியமாகும். உலக வரலாற்றையே மாற்றியமைத்த அந்த மாமனிதர் சாதாரண மனிதராகவே பிறந்தார்கள். அற்புதங்கள் எதுவும் அவர் பிறப்பின் போது நிகழவில்லை. மனித நிலையை விட்டும் தெய்வீக நிலைக்கு அவரை உயர்த்த முயழும் அனைத்து அறிவிப்புக்களும் வெறும் கட்டுக்கதைகளே! அனைவரையும் போல காய்ந்த ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த தாய்க்கே மகனாகப் பிறந்தார்கள். எனவே இறைத்தூதர் தெய்வாம்சம் பொருந்தியவரல்ல. தெய்வாம்சம் பொருந்தியவர் என்று கருதினால் அவரது வாழ்க்கைத்திட்டம் பொருத்தமற்றதாகப் போய்விடும். அவர்மீது பற்றோ பரிவோ வராது. அவர் சாதாரண மனிதரே என்பதை பின்வரும் வசனம் தெளிவாக முன்வைக்கின்றது. “நபியே சொல்லுங்கள! நான் உங்களைப் போன்ற உடல் தேவைகள் கொண்ட மனிதனே.’’ (18:110)







அரபிகள் அற்புதங்களை நிகழ்த்துமாறு கேட்டபோது, அதற்கு மறுப்புச் சொல்லும் வேளை “ஒரு மனிதத் தூதரிடமா இத்தனையும் கேட்கிறீர்கள்.’’ (17:90-94) வஹி இறங்க முன்பும் தனது நபித்துவம் பற்றி முஹம்மத் அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. “நபியே சொல்லுங்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் அதனை உங்களுக்கு ஓதிக்காண்பித்திருக்க மாட்டேன். அதைப்பற்றி அறிவித்திருக்கவும் மாட்டேன். இதற்கு முன்னால் உங்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட ஆயுள்காலம் நான் வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் சிந்திக்கக் கூடாதா?’’ (10-16)







அவ்வாறே முஹம்மத் முன்னைய தீர்க்கதரிசிகளில் இருந்து வித்தியாசப்பட்ட புதியதோர் அமைப்பை நுபுவத்தில் பெற்றிருக்கவுமில்லை. அதாவது அவரது ஆழுமை, தூது இவற்றில் ஏனைய தூதர்களிடம் காணாத புதிய எதுவும் அவரிடம் இருக்கவில்லை. “முஹம்மத் ஒரு தூதரே அவருக்கு முன்னால் பல தூதர்கள் வாழ்ந்து சென்றுள்ளனர்’’ (2:144) “முன்னைய தூதர்களில் இருந்து வேறுபட்ட புதியதோர் அமைப்பை நான் கொண்டுவரவில்லை. எனக்கு என்ன நடக்கும் உங்களுக்கு என்ன நடக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது. எனக்கு வஹியாக கிடைப்பதயே நான் பின்பற்றுகிறேன். நான் ஒரு தெளிவான எச்சரிக்கையாளனே’’







“உமக்கு முன்னால் பல தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவியர்களையும் சந்ததியர்களையும் வழங்கினோம். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தவொரு தூதரும் அற்புதத்தை கொண்டுவர முடியாது’’ (13:38)







முஹம்மத் அவர்கள் சாதாரண மனிதரே என்பதற்காக அவரது தூதை மறுத்தோருக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த வசனங்களில் அதிகமானவை இறங்கின என்பதை கவனத்தில் கொண்டால் இறைத்தூதர் சாதாரண மனிதரே என்ற கருத்து மேலும் வழுப்பெறுவதைக் காணலாம். உலகில் ஏனைய தீர்க்கதரிசிகள் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்தமாதிரி முஹம்மதும் ஒரு மனிதர்தான். உஹது யுத்தத்தில் முஹம்மத் கொள்ளப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரவியது. இதற்குப் பின் போராடிப் பயன் என்ன என்ற கருத்தில் தோழர்கள் பலர் பின்வாங்கிச் சென்றனர். அப்போது குர்ஆன் இஸ்லாம் தொடர்ந்தும் வாழும் கொள்கை. அது ஒருவரின் இறப்பினால் அழியக்கூடியது அல்ல என்ற கருத்தை முன்வைத்தது. இதே வசனத்தை நபிகளார் மரணித்த போது அபூபக்கர் உமருக்கு ஓதிக் காண்பித்தார்கள்.







சாதாரண மனிதராக பிறந்த இறைத்தூதர் சாதாரண மனிதராகவே தொடர்ந்து வளர்ந்தார்கள். இறை வழிகாட்டலும் அவரது வாழ்க்கையில் எதர்பாராத திடீர் நிகழ்வாகவே அமைந்தது. “உம்மை அநாதையாகக் கண்டு ஆதரவளிக்கவில்லையா? உம்மை வழிதெரியாதவராகக் கண்டு வழிகாட்டவில்லையா? உம்மை ஏழையாகக் கண்டு சீமானாக்கவில்லையா?’’ (93:6-8)







இந்த வசனங்கள் முஹம்மதின் ஆரம்பகால வாழ்வை மிகச்சுருக்கமாக முன்வைக்கின்றன. அவர் அநாதையாகவே வாழ்வை ஆரம்பித்தார்கள். ஹலிமா என்ற செவிழித்தாயின் வளர்ப்பும் அபூதாலிபின் பாதுகாப்பும் ஆரம்பத்தில் அவருக்குக் கிடைத்தது. பிற்காலத்தில் கதீஜாவோடு ஏற்பட்ட தொடர்பு அவருக்குச் செல்வத்தைத் தந்தது. இறுதியில் அவரைத் திருமணம் முடித்தார்கள். பொருளாதாரப் பிரச்சினை நீங்கியது. இது தியானம், ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட வசதியளித்தது. எனவேதான் திருமனத்தின் பின்னர் எந்த வியாபாரப் பயணங்களிலும் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. மாற்றமாக இக்காலப்பிரிவில் தனிமை, தியானம், ஆழ்ந்த சிந்தனை பற்றியே அவரது சீறாவில் குறிப்பிடப்படுகிறது. உம்மை வழிதெரியாதவராகக் கண்டு, வழிகாட்டவில்லையா என்ற வசனம் இறைத்தூதர் சரியான வழியைக் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட பெரும் போராட்டத்தைச் சித்தரிக்கின்றது. ‘உமது உள்ளத்தை விரிவுபடுத்தவில்லையா’ என்ற வசனம் சரியான வழிதெரியாது ஏற்பட்ட மனக்கஷ்டத்தை நீக்கிவைத்ததைக் காட்டுகின்றது. அதாவது வழிதெரியாமல் கஷ்டப்பட்ட போது, வழியைக் காட்டி மனத்துயரை அல்லாஹ் அகற்றிவிட்டான். வஹி ஒரு பெரும் சுமையாகும். சாதாரண மனிதனாக இருந்த முஹம்மதால் அதைச் சுமக்க முடியாதிருந்தது. ‘உமது முதுகை முறிக்கக் கூடிய பெரும் சுமையை இறைவன் இறக்கிவைக்க வில்லையா’ என அல்குர்ஆன் கேட்கிறது. நபிகளார் மக்கா வாழ்வில் சத்தியத்தைத் தேடித்திரிந்தார்கள். ஏற்கனவே தான் தூதர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இந்தவகையில் பார்க்கின்ற போது, முஹம்மத் தெய்வாம்சம் பொருந்தியவரல்ல. “வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்பதை நபியே நீர் அறிந்திருக்கவில்லை’’ (49:52) அல்குர்ஆனின் பல இடங்களில் இப்றாஹீமிய வழிமுறை பற்றி வந்துள்ளது. இது இப்றாஹிமைப் பற்றி அரபிகள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. (1:132), (16:120-123), (22:78) போன்ற வசனங்களை இதற்கு உதாரணமாக் குறிப்பிடலாம். வரகா பின் நவ்பல், அப்துல்லாஹ் பின் ஜஹ்ல். ஸயித் பின் அம்ர், குஸ் இப்ன் ஸாயிதா போன்றோர்களை நபிகளார் சந்தித்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இவர்கள் ஹனீப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவராகவே முஹம்மத் இளமையில் இருந்து வாழ்ந்து வந்தார்கள். அந்த அடிப்படையில் தான் ஆன்மீக ரிதியான விளக்கங்களில் வாழ்வின் குறிக்கோள் பற்றிய தேடலில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் பார்க்கும் போது முஹம்மதின் நபித்துவம் வரையிலான வாழ்வு தூய்மையான உயர்ந்த வாழ்க்கையை காட்டுகின்றது. அவர் பௌதீக உலகுக்கு அப்பாற்பட்ட தெய்வாம்சம் பொருந்தியவர் என எந்த வகையிலும் அந்த வாழ்வு காட்டவில்லை.







‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற அ. மார்க்ஸின் நூல் தமிழ் நிலைப்பட்ட வாசகர்களுக்கு நபிகளார் பற்றிய புதிய பார்வையை முன்வைக்கின்ற அறிய படைப்பு என்று கூறலாம். அவரது வார்த்தைகளில் சொல்வதானால் பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்துக்குப் பிந்திய ஒரு வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. மாறாக இவ்வுலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத்திட்டத்தையும் முன்வைத்து இயங்குவதால் அது மிகுந்த செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. அதுபோலவே நபிகள் ஒரு வெறும் இறைத்தூதர் மற்றுமன்று, அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும் கூட. வால் எடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.







அவரது அன்றாட வாழ்க்கை உரையாடல்கள் வெற்றிகள், தோல்விகள், மான்புகள், பலவீனங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. நம்பத்தகுந்த எல்லோரும் ஏற்றுக் கொண்ட வரலாற்று ஆவணங்களாக அவை உள்ளன. இறைத்தூதர் முஹம்மதின் வாழ்வை அறிய அறிய அவரின் மானுடத்தன்மையில் நான் என் உளம் இழந்தேன். அவரது ஆழுமையில் கரைந்து போனேன்.







மானுடராய் நம் முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கம் மிக்க ஓர் அங்கமாக விளங்கியதன் விளைவாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக அமைகிறது. ஏராளமான சம்பவங்கள் ஏராளமான மனிதர்கள். நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற ஒரு ஏசுநாதரையோ ஒரு புத்தரையோ நாம் பார்த்துவிட முடியாது. சிரித்து மகிழ்கிற அழுது குழுங்குகிற காதல் வயப்படுகிற மன்னிக்கும் மான்புகள் நிறைந்த ஒரு மாமனிதராக முஹம்மது நபிகள் நம்முன் நிற்கிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதேநோரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும் அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாக வெளிப்படும் முக்கிய சில இஸ்லாமிய இறையியற் சிந்தனைகளையும் நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே முன்வைத்துள்ளேன். மிகுந்த கவனத்துடன் செய்யவேண்டிய பணி என்பதால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலான செய்திகளை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்.’’ என்று கூறுகிறார் அ. மார்க்ஸ்.







இருபத்தெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் நபிகளாரின் மரணம் வரையும் பேசுகின்றது. பல்வேறு கோத்திரங்களாக பிளவுபட்டிருந்த அரபு சமூகத்தை ஐக்கிய உம்மத்தாக கட்டியெழுப்பிய நபிகளாரின் வரலாற்றுப் பாத்திரத்தை அதன் வகிபாகத்தை மிகத்தெளிவாக மார்க்ஸ் ஆராய்கின்றார். வரண்ட பாலைவன மண்ணில் இஸ்லாம் என்ற கொள்கையை எவ்வாறு வாழும் பயிராக வளர்த்தெடுத்தார் என்பதை அவர் விளக்கும் பாணி வித்தியாசமானது. நம் அனைவருக்கும் தெரிந்த சம்பவங்களையும் திருக்குர்ஆன் வசனங்களையும் தான் புரிந்து கொண்ட முறைமை நான் வாசிக்கும் போது ஒரு புது அனுபவத்தை, பார்வைத் தெளிவை தருகின்றது. உம்மத் உருவாக்கத்தில் ஹிஜ்ரா என்ற புலப்பெயர்வும் மதீனா சாசனமும் ஆற்றும் பங்கை அவர் கவனத்தில் எடுக்கத்தவறவில்லை. நபிகளாரின் ஸீராவை அற்புதங்களால் கட்டமைக்காமல் அந்த ஸீராவின் மீது கீழைத்தேய வாதிகள் தொடுத்த விசக்கணைகளை விலக்கி தோலுரித்து தூய்மையாக நபிகளாரை அ. மார்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு ஸ்தோத்திரப் புத்தகமாக அல்லாமல் சீறாவின் நெளிவு சுளிவுகளை தாண்டி வரலாற்றை அது இயக்கிய முறைமையை ஒவ்வொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டுகின்றார். படிப்பினைகள் சிறு துளிகளாகவும் ஒளிக்கீற்றுக்களைப் போலவும் அவர் எழுத்துக்களில் வெளிப்படும் போது உள்ளிருந்து சீறாவைப் பார்கும் நமக்கு புதிய நம்பிக்கையைத் தருக்கின்றது.







இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் அல்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பாகும். எழுபதாண்டுகள் பழமைவாய்ந்த நமது குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மொழி இந்நூலில் மாற்றத்துக்குள்ளாகி இருப்பதும் கவனத்துக்குரியது. மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் முழு நிறைவானதல்ல. முடிந்த முடிவும் அல்ல. குறிக்கோள் மொழி மூல மொழியைவிட மாறிக் கொண்டிருப்பதே அதற்குக் காரணமாகும். காலத்துக்குக் காலம் மொழிபெயர்ப்பு சீரமைக்கும் போதுதான் அல்குர்ஆனை புதிய தலைமுறைக்கு கையளிக்க முடியும். பாகவி காலத்துத் தமிழ் இன்று இல்லை. பின்நவீன பின்மார்க்ஸிய மொழியில் அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசிவரும்; அ. மார்க்ஸ் மொழியையும் ஒழுங்கவிழ்ப்புச் செய்யாமலிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதேநேரம் மூலமொழிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கியமாகின்றது. அத்தகைய சிறு மொழித் தவறுகளைத் தவிர அவரது மொழிபெயர்ப்பில் தாவிச் செல்லாத கவனம் குவிகிறது.







அக்ரம் ழியா அல்-உமரி, முனீர் கழ்பான் போன்ற அரபு இஸ்லாமிய ஆய்வாளர்கள் சீறாவின் இயங்கியல் குறித்து மிக ஆழமான விரிவான படைப்புக்களை தந்துள்ளனர். கீழைத்தேய வாதம் ஸீராவின் புதிய திசை வழிகளைக் கண்டறிவதில் ஊக்கியாகத் தொழிற்பட்டதை மறுப்பதற்கில்லை. குர்ஆனின் இயங்கியலை கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடக்கிவைத்த ஷஹீத் செய்யித் குத்ப் அவர்களுக்குப் பின் இஸ்லாமிய இயக்க உருவாக்கத்தில் சீறா மறுவாசிப்புக்குட்பட்டது. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் முதன் நூலாக விளங்கும் உமறுப்புலவரின் சீறா தொடக்கம் மு. மேத்தாவின் நாயகம் ஒரு காவியம் வரை சீறா இலக்கியம் தமிழில் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் சமூக மாற்ற சக்திகளுக்கு சீறா பற்றிய மறுவாசிப்புக்குரிய நூல்கள் எழுத்துக்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்கள் மட்டுமே பயில வேண்டும் என்ற நிலை மாறி இஸ்லாம் ஒரு எல்லோரும் பயிலும் பொதுக் கல்வியாக எவ்வாறு முன்வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு இந்நூல் சமகால சாட்சியமாகும்



மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16