வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (4)




டாக்டர் ஷேக் சையது M.D

فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
''ஆகவே மனிதன், (தான்எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?''
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான்.
அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.''(அல்குர்ஆன் 86: 5,6,7)
கடந்த இதழில் 86 அத்தியாத்தின் 6வது வசனத்தில் ''குதித்து வெளியாகும் நீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான்'' என்று இறைவன் கூறியதன் பொருளை விளக்கமாக விந்து எவ்வாறு வெளிப்படுகிறது என்றும், அதன் பயன்பாடுகள் என்ன என்றும் பார்த்தோம்.
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற இரகசியத்தை இந்த வசனத்தில் குறிப்பிடும் இறைவன் அதனை சாதாரணமான செய்தியாக சொல்லாமல், அந்த செய்தியை சொல்வதற்கு முன்பே மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும் என்று கூறி, நமது சிந்தனையைத் தூண்டிவிட்டு, அதற்குப்பிறகுதான் ''குதித்து வரும் நீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான்'' என்ற தகவலைக் கூறுகிறான்.
''குதித்து வரும் நீரிலிருந்து'' எவ்வாறு மனிதன் படைக்கப்பட்டிருக்க முடியும், அதன் தன்மைகள் யாது? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும். காரணம் அவ்வாறு ஒரு மனிதன் சிந்தித்து தான் எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதின் உண்மை நிலையை தெரிந்து கொண்டால், தன்னைப்படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்பதை நம்பி, அந்த இறைவனின் அற்புத ஆற்றலை அறிந்து கொள்வான் அப்போது தன்னைப்படைத்த ஆற்றல் மிக்க அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும் என்ற உணர்வு அவனில் ஏற்படும். எனவே "குதித்து வரும் நீர்" எத்தகைய தன்மை வாய்ந்தது என்று இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
விந்துவின் சேர்மங்கள்:
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعاً بَصِيراً
''நிச்சயமாக நாம் மனிதனை கலப்பான ஓர் இந்திரியத்துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு நாடிய)வர்களாக அவனைப் படைத்தோம் எனவே செவியுறுபவனாகபார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்'. (அல் குர்ஆன்: 76: 2)
இந்த வசனத்தில் இந்திரியத்திற்கு ''கலப்பான'' என்ற ஒரு தன்மையை சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல விரிவுரையாளர்களும் ''பெண்ணின் கரு முட்டையுடன் கலந்த இந்திரியம்'' என்று பொருள் கொள்கிறார்கள்.ஆனால் வேறு சில விரிவுரையாளர்கள் ''அந்த இந்திரியத்தில் மரபணுக்கள், உயிரணுக்கள், வேதியியல் பொருட்கள், மேலும் பல தனிமங்கள் சேர்ந்திருப்பதால் அதனை கலப்பான இந்திரியம்'' என்று இறைவன் கூறியுள்ளான் எனக் கருதுகிறார்கள்.இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ''கலப்பான'' என்ற வார்த்தைக்கு இவ்வாறு இருவகையான பொருள் கொள்வதற்கும் எந்த தடையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. காரணம் இந்த வசனத்தில்''கலப்பான இந்திரியம்'' என்று பொதுவாகத்தான் இறைவன் குறிப்பிட்டுள்ளான், எதனுடன் கலந்தது என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, எனவே இரண்டு விதமாகவும் இந்த வசனத்திற்கு பொருள் கொள்வதற்கு சாத்தியம் உண்டு.
மேலும் மனிதன் படைக்கப்பட்ட செய்திகளைக்கூறும் அனைத்து வசனங்களை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் இரண்டாவது பொருள்தான் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இந்தக் கருத்தை சையது குத்பு என்ற விரிவுரையாளர் தனது விரிவுரையில் குறிப்பிடுகிறார். இந்த இரண்டாவது பொருள் எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதைப் பார்ப்போம்.
இறைவன் பயன்படுத்தியுள்ள ''நுத்ஃபத்'' என்ற வார்த்தைக்கு விந்து என்றுதான் இதுவரை பல மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் அர்த்தம் சொல்லிவந்துள்ளார்கள். ''நுத்ஃபத்'' என்ற வார்த்தைக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்த அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு விந்துவின் சேர்மங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
1. Citri Acid (சிட்டிரிக் அமிலம்)
2. Cholesterol (கொலஸ்டிரால்)
3. Zinc Phosphates (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. Acid Phosphates (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. Bicorbonates (பைகார்பனேட்)
6. Hyalorunic Acid (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவம் சுமார் 20% வீதம் வரை இருக்கும்.
1. Androgen (ஆன்ரோஜன்)
2. Estrogen (ஈஸ்ட்ரோஜன்)
3. Glutamic Acid (குளுட்டாமிக் ஆசிட்)
4. Inositol (இனோசிட்டால்)
5. Inhibin(இன்ஹிபின்) 2. Protein (புரதம்)
இந்த வகைத் திரவங்கள் உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கும் பாதுகாப்பாக கற்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் ''மாஉ'' என்றும், ''மனிய்'' என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
''அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான்.'' (அல் குர்ஆன் 32: 8)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
'
'அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா?'' (அல் குர்ஆன் 77: 20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
''குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான்.'' (அல் குர்ஆன் 86: 6)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
''(கற்பத்தில்செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா?'' (அல்குர்ஆன் 75:37)
மேற்கூறப்பட்ட முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு ''மாஉ'' என்ற வார்த்தையையும், நான்காவது வசனத்தில் ''மனிய்'' என்ற வார்த்தையையும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.ஆனால்''நுத்ஃபத்'' என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வது அவ்வளவு பொருத்தமானதல்ல. அந்த வார்த்தைக்கு விந்துவில் உள்ள ''உயிரணு'' என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகப்பொருத்தமாக உள்ளது. இந்த அர்த்ததை அந்த வார்த்ததைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.
அது சம்மந்தமான வசனங்கள் வின்வருமாறு,
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
(المؤمنون:13)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
(المرسلات:20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
(الطارق:6)
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
(السجدة:8)
خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ
(النحل:4)

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمّىً ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلاً ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلا يَعْلَمَ مَنْ بَعْدِ عِلْمٍ شَيْئاً وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ
(الحج:5)
مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
(لنجم:46)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى)
(القيامة:37)
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعاً بَصِيراً
(الانسان:2)
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
(عبس:19)
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَاماً فَكَسَوْنَا الْعِظَامَ لَحْماً ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقاً آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
(المؤمنون:14)
                                    இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (5)
                                                                       
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16