மேலும், ஹஜ் யாத்திரைக்காக ஓமர்,தனது மகனும் ஒபாமாவின் தந்தையின் சகோதரருமான சயீட் ஹுசைன் ஒபாமா மற்றும் அவருடைய பேரப்பிள்ளைகள் நால்வருடன் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.இதேவேளை, ஹஜ் தொடர்பான விடயங்களை மட்டுமே தான் பேசவிரும்புவதாகவும் ஒபாமாவின் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவிரும்பவில்லை எனவும் ஓமர் குறித்த நாளிதழுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சவுதி அரேபிய அரசின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஓமர் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் ஹஜ் யாத்திரைக்கு வந்திருக்கலாம் எனும் தோற்றப்பாடு எழுந்துள்ளதாயினும் அது உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில் சிறப்பான விருந்தோம்பலுக்காக சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு சயீட் நன்றி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் போது 20 வீத அமெரிக்க மக்கள் ஒபாமாவை ஒரு முஸ்லிம் எனக் கருதுவதாகத் தெரிவித்திருந்தனர். எனினும் இதனை முற்றாக நிராகரித்திருந்த வெள்ளைமாளிகை ஒபாமா தொடர்ந்தும் கிறிஸ்தவராகவே இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது