கருணையாளனிடம் கேட்போம்
அன்பு சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்."துஆ" நம் வணக்கத்தில் ஒன்றாகும்.அந்த வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ் (ஜல்) தவிர வேறு யாருமில்லை. இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு மனக்கவலைகள், தேவைகள் நிறைவேறவேண்டுமென்ற ஏக்கங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. அல்லாஹ் மிக இரக்கமுடையவன். நாம் அவனிடம் கையேந்துவதை விரும்புபவன்.
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).
பாவங்கள் செய்வது மனிதனின் இயல்பு. அதை திருத்திக்கொள்வதும் அத்துடன் அதற்காக தவ்பா செய்வது தான் அதற்கான சரியான தீர்வு. நான் பாவங்கள் செய்தவன் என்பதால் என் துஆ இறைவனிடன் அங்கீகரிக்கப்படாது என்று கருதுவது, தனக்குதானே ஒருவன் தப்பிக்க தேடும் ஒரு தவறான வழியாகும். மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் செய்வது தான் தவ்பா. அப்படி செய்துவிட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே பாவத்தை செய்து விட்டால் அல்லாஹ்விடம் சத்தியத்தை மீறிய குற்றத்துக்கு ஆளாகிவிடுவோமே என்று நினைக்கிறான் மனிதன். வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அப்படியிருந்தும் "நாங்கள் கேட்டால் கிடைக்காது அதனால் இறைவனின் நெருக்கத்தை பெற்றவர்களிடன் முறையிட்டு பெறுகிறோம் என்று சொல்வது" அல்லாஹ்வின் கருணை மீது அவர் கொண்டுள்ள சந்தேகம் இல்லையா? யார் மற்றவருக்காக துஆச்செய்தாலும், தேவை உள்ளவர் அல்லாஹ்விடன் கொண்டுள்ள நெருக்கத்தை பொருத்துத்தான் கொடுப்பதும் மறுப்பதும் அமையும் . அதனால் அல்லாஹ்வின் அளவற்ற கருணைமீது நம்பிக்கை வைத்து கிடைக்கும் என்ற மன உறுதியுடன் அவனிடமே அனைத்தையும் கேட்போமாக.
ஐவேளை தொழுகைக்குப்பிறகும் நாம் துஆக்கேட்கிறோம். ஆனால் மனதை ஒருங்கினைத்து கேட்கிறோமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வழக்கமாக நாம் ஒரேமாதிரியான துஆக்களை கேட்பதால் நம் சிந்தனை இங்கே இல்லாவிட்டாலும் நம் நாவு அதை அடுக்காக கேட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை, அது சரியான முறையாகாது. மறதியில் கேட்பதை இறைவன் விரும்புவதில்லை. மனதை ஒன்றி, அவன் நம்மை கவனிக்கிறான் என்பதை மனதால் நினைத்து, நாம் என்ன கேட்கிறோமோ அந்த சூழ்நிலையை கண்முன் நிறுத்தி பனிவுடன் கேட்கவேண்டும். அவன் கண்டிப்பாக நம் துயரத்தை நீக்குவான் என்ற உறுதியோடு கேட்கவேண்டும்.
இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் அவனை நாம் வணங்கவே!. அதற்க்காக சன்னியாசத்தையும் அவன் விரும்பவில்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையே அவனின் இபாதத்தில் கழிக்கமுடியும். எப்படியென்றால், நாம் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் அனுமதித்த வகையில் செய்வதாகும். இஸ்லாத்தின் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றியும், பொய் சொல்லாமலும், பொறாமை கொள்ளாமலும், புறம் பேசாமலும், மற்றவருக்கு நாவினாலும், உடல் உறுப்பினாலும் தீங்கிழைக்காமலும், முடிந்தவரை மற்றவருக்கு உதவியாகவும், ஹலாலான வழியில் பொருளீட்டியும், நம்பிக்கை மோசடி செய்யாமலும், தர்மங்கள் செய்தும், முடியும்போது நபிலான வணக்கங்களை செய்தும், பயன் தராத காரியங்களில் நேரத்தை வீணாக்காமலும், முக்கியமாக நாம் ஒவ்வொரு நொடியும் இறைவனால் கண்கானிக்கப்படுகிறோம் என்பதை புரிந்தும், அவனுக்கு பயந்தும் வாழ்ந்தாலே நாம் ஒவ்வொரு நாளையும் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் கழித்த நல்லவர்களாகிவிடுகிறோம். சுருக்கமாக நம் வாழ்க்கையில் இறைவன் விரும்பாதவைகளை தவிர்த்தல் ஆகும். இவ்வாறு வாழ்ந்தால் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்காமல் அவனின் பொருத்தத்தை பெறலாம், அவனிடம் தயங்காமல் நம் தேவைகளையும் கேட்கலாம்.
சில குறிப்பிட்ட நேரங்களில் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்ற நமது கண்மணி நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பை இப்போது பார்ப்போம்.
(கீழே தரப்பட்டுள்ளவைகள் சத்திய மார்க்கம்.காம்-லிருந்து எடுக்கப்பட்டவைகள்)
துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!
"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 040:060)
என்று இறைவன் தனது திருமறையில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினைக் குறித்து கூறுகின்றான்.
நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள்.
இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சில கீழே:
இரவின் மூன்றாவது பகுதி.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (ஸஹீஹ் புகாரி : ஹதீஸ் குத்ஸி)
அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அத் திர்மிதி, அந் நஸாயீ, அல் ஹாக்கீம் ஸஹீ)
மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் அல்லது ஒரு பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருளுகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757)
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துவாக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை." (அஹ்மத், அபு தாவூத் # 521, அத்திர்மிதி # 212, ஸஹீஹ் அல் ஜாமி # 3408, அந்நஸாயி மேலும் இப்னு ஹிப்பான் ஸஹீஹ்)
வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம்.
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி பேசும் போது கூறினார்கள், "வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உள்ளது; அதை ஒரு முஸ்லிம் தனது பிராத்தனையில் பெற்றுக்கொண்டு ஏதேனும் அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் அந்த பிராத்தனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான். மேலும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளினால் அதன் சிறிய அளவு நேரத்தை சைகை மூலம் காட்டினார்கள்." (ஸஹீஹுல் புகாரி)
ஜம் ஜம் நீர் குடிக்கும் போது.
ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது." (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)
இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.
ஸஜ்தாவில் இருக்கும் போது.
அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து தமது தேவைகளை கேளுங்கள். (முஸ்லிம், அபு தாவுத், அந்நஸாயி மற்றும் ஸஹீஹ் அல் ஜமீ # 1175).
இரவில் விழித்தெழும் போது.
உபைதா பின் அஸ் ஸமித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் ஒருவர் இரவில் விழித்து எழுந்து லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதிர். அல்ஹம்துலில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(இதன் பொருள்: வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் இல்லை அல்லாஹ்வைத்தவிர. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணைகள் எவரும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் அவனுக்கே எல்லாப்புகழும். எல்லா கண்ணியமும் அவனுக்கே . மேலும் அவனைத் தவிர எவரும் வணக்கத்திற்குரிய தகுதியுடையவர்கள் இல்லை. மேலும் அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் எவ்வித வல்லமையும் சக்தியும் அல்லாஹ்வையன்றி இல்லை)
இதைக் கூறிய பிறகு அல்லாஹும்மக்பிர்லி (எனது இறைவனாகிய அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக) என்று கூறி அல்லாஹ்வை அழைத்துப் பிராத்தித்தால் அல்லாஹ் பதிலளிப்பான். அவன் உளுச் செய்து தொழுதால் அவனது தொழுகையும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். (ஸஹீஹுல் புகாரி)
நோன்பாளியின் துவா அவன் நோன்பை விடும் வரை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துவா; நோன்பாளியின் துவா; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துவா." (அல் பைஹகி, அத் திர்மிதி – ஸஹீஹ்)
நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள், "மூவரின் துவாக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளர்; (அநியாயமாக)பாதிக்கப்பட்டவர்." (அஹமத், அத்திர்மிதி)
அல்லாஹ்வையன்றி நம் மீது இரக்கம் கொள்பவர் யாருமில்லை. அவனையன்றி உதவி செய்பவர் யாருமில்லை. அவன் கொடுப்பதை தடுப்பவர் யாருக்குமில்லை அவனின் தீர்ப்புகளை மாற்றும் சக்தி எவருக்குமில்லை.
முக்கியமாக நமதூரில் நோயால் சிரமப்படும் சில சகோதர சகோதரிகளையும் உங்களது துஆவில் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் சகோதர சகோதரிகளே.
-சுப்ஹானகல்லாஹும்ம அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லா அன்த்த அஸ்தஃபிருக்க வ அதூபு இலைக்.
அல்லாஹ் நம் அனைவரின் வேண்டுதல்களை நிறைவேற்றித்தருவானாக ஆமீன்.
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16