வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இத்தலைப்பில் சில கேள்விகளும் விளக்கங்களும் - 1


பொதுவாக இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி
கேள்வி 1:
ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும்நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும்சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும்எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் - மூஸா(அலை)
ஸபூர் - தாவூத்(அலை)
இன்ஜீல் - ஈஸா(அலை)
குர்ஆன் - முஹம்மது(அலை)

முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல்அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலிப்லாம்றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும்வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)(14:1)

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(14:52)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (2:185)

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவேஎவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோஅது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)

கேள்வி 2:
எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா?

பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களே அல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும்ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் செய்யலாம்இல்லாமலும் இருக்கலாம்.

கேள்வி 3:
வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?

பதில்: வேதங்களும்புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை. தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல்கூட்டுதல்குறைத்தல்திரித்தல்,கழித்தல்சேர்த்தல்நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

கேள்வி 4:
ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?

பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டுநன்மாராயங் கூறுபவராகவும்அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை (35:24)

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர்மேலும்ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு(13:7)

இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:164)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும்அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.(40:78)

25 நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூஸா(அலை),தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஈஸா(அலை)முஹம்மது(ஸல்) போன்ற இறைத்தூதர்கள்.

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும்வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும்நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

நபி முஹம்மது(ஸல்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லைஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்,நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

நபி முஹம்மது(ஸல்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லைஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி: ஜாபிர்(ரலி))

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும்இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன்,ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம்(அலை) எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதரா?ஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம்அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

இராமரும்கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும்கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

இத்தலைப்பில் சில கேள்விகளும் விளக்கங்களும் - 2



கேள்வி :
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

பதில்:
அல்லாஹ் மனிதனை பல்வேறு சோதனைக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

அல்லாஹ் மனிதனை பல்வேறுவழிகளில் சோதிக்கிறான் பள்ளிகளில் நிகழும் தேர்வுகளில் வினாத்தாள்கள் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு கேள்விகள் மாற்றி மாற்றி கேட்கப்படுகின்றன. அதுபோன்று மனிதனை படைத்த இரட்சகன் பல்வேறு வழிகளில் சோதிக்கின்றான் அதாவது சில குழந்தைகளை நோயுற்றதாகவும் சில குழந்தைகளை செல்வ நிலையுடனும் சிலதை வறுமையுடனும் பிறக்க வைக்கிறான்.

சோதனைகளில் எதிர்கொள்ளும் துன்பத்தைப் பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அல்லாஹ் தன் படைப்புகளை அதிகம் சோதித்தால் அச்சோதனையின் கடினத்தைப் பொறுத்து அதன் மீது வழங்கும் தீர்வில் எளிமையைக் கையாள்கிறான். இதனை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஏழ்மையில் உழலும் ஒருவன்தான் சுய தேவையைப் பூர்ததி செய்யவே மிக அல்லலும் துன்பமும் படுகிறான். எனவே ஜக்காத் அவன் மீது சுமத்தப்படவில்லை. ஆகவே ஜக்காத் என்னும் இஸ்லாமியக் கடமையைப் பொறுத்தவரை இந்த ஏழை நூறு சதவீத பலனை நுகர்கிறான். மாறாக பணம் படைத்து செல்வந்தனோ ஜக்காத் வகையில் பல கேள்விகளுக்கு இறைவனிடம் ஆளாகி ஏழை பெற்றது போல் முழுப்பலனையும் பெற முடியாமல் சிக்கித் தவிக்கிறான். ஆக சோதனையின் கடினம் ஒருவனின் மறுமை வாழ்வில் தீர்வில் எளிமையை வழங்குகிறது.

சிலரை அல்லாஹ் குருர்களாசெவிடர்களாக அங்கஹீனனாகப் படைப்பதன் காரணம் அக்குழந்தை செய்த எந்தத் தீங்கும் அல்ல மாறாக அதன் பெற்றோர்கள் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றனர். என்றே பொருள் கொள்ளவேண்டும். இச்சோதனையில் அப்பெற்றோர்கள். ஈமானிய உறுதியுடன் பொறுமை காக்கின்றனராபுலம்பித்தீர்க்கின்றனரா என சோதித்தறியவே. இதை கீழ்கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

''நிச்சயமாக உங்கள் செல்வமும்உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)


சிலை வணக்கம் மனதை ஒரு நிலைப்படுத்தவே
கேள்வி:
இந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது?

பதில்:
இந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமேசிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு வணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.

குழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால்நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ''இடியனது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது" என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யாஎன்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில்தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.

மனதை ஓர்மைப் படுத்த சிலை வணக்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியாமனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர். ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்று கொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டடும்.

முஸ்லிம்கள் கஃபாவை ஏன் வணங்குகின்றனர்?
கேள்வி
இஸ்லாம் சிலை வணக்கத்தை எதிர்க்கிறது இருப்பினும் முஸ்லீம்கள் ஏன் கஃபாவைத் தொழுகிறனர்?

பதில்
முஸ்லீம்கள் தொழுகையில் கஃபாவை வணங்கவில்லை மாறாக கஃபா இருக்கும் திசை நோக்கி தம் முகத்தை வைத்துக் கொண்டு தொழுகின்றனர். (முன்னோக்கியவர்களாக) இது இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இரட்சகனின் விருப்பப்படி நடக்கிறது.
நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம் எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம் ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் தொழுங்கள் நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள்இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள் அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:144)

ஆகவே கிழக்கு பாகங்களில் இருப்போர் கஃபா இருக்கும் மேற்கு நோக்கியும் மேற்கில் இருப்போர் கஃபா இருக்கும் கிழக்கு நோக்கியும் தொழுவர்.

முதன் முதலில் உலக வரைபடத்தைத் தந்தவர்கள் முஸ்லீம்களே. அவர்களின் வரைபடத்தில் தெற்கு மேலும் வடக்கு கீழும் கஃபா எனும் இறையாலயம் வரைபடத்தின் நடுவிலும் இருந்தது. பின்னரே மேற்கத்தியர்கள் வரைபடத்தை மாற்றியமைத்தனர். வடக்கை மேற்புறமும் தெற்கை கீழ் புறமுமாக மாற்றினர். இருப்பினும் இவ்வரை படத்திலும் கபா உலகின் மையமாக உள்ளது.

·பாவை வலம் வருவது ஓரிறைக்கொள்கையை உணர்த்துவதற்கே. மக்காவிலுள்ள கஃபாவை முஸ்லீம்கள் வலம் வருவர்இதற்கு தவாப் என்று பெயர். ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு மையம் (Center) இருப்பது போல் ஒட்டு மொத்த உலக படைப்புகளுக்கம் ஒரு இரட்சகன் உள்ளான் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

நீ ஒரு கல்லாக உள்ளாய். உன்னால் எனக்கு எந்த பயனையோதீங்கைபோ செய்யவியலாது. நபி(ஸல்) அவர்கள் உன்னை தொட்டு முத்தமிடுவதை நான் கண்டிராவிடில் உன்னை நான் ஒரு போதும் தொட்டிருக்கமாட்டேன் (முத்தமிட) என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கூறுகிற செய்தியை ஹதீஸ் புகாரியில் காண்கிறோம்.

நாம் முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. மாறாக கஃபாவை படைத்த அல்லாஹ்வையே வணங்குகிறோம். மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிலால்(ரலி) அவர்கள் கஃபா மீது ஏறி பாங்கோசை ஒலித்ததை ஹதீஸ்களில் காண்கிறோம்.

www.islamkalvi.com
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16