வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

விடுதலை என்பது வார்த்தை அல்ல வேட்கை என நிரூபிப்போம்

உலகில் வன்முறைகள் பெருகிவிட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், என அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மனித சமூகம். கலாச்சார சீரழிவினால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்புக்குள்ளாகிறது. இது என்னுடைய கருத்தல்ல. மனித நேயம் கொண்ட, பகுத்தறியும் சக்தியில்லா விலங்கினங்களையும் பகுத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திரண்படைத்த மனிதர்களையும் வேறுபடுத்தி காட்டும் சிந்திக்கும் திரண் கொண்ட சீரிய மனிதர்களின் எண்ணங்களில் உலாவிக் கொண்டிருக்கும் கருத்தாகும்.
இது போன்ற கலாச்சார சீரழிவுகள் மேற்குலகின் இறக்குமதி. பெண்களை போகப்பொருளாக்கி, வியாபார சந்தைகளில் நடமாட விடுகின்றனர். அதனை ஏற்றுக் கொண்ட மேற்குலக கலாச்சாரத்தில் வாழ்பவர்களை நாகரீக கோமான்கள் என்றும், சிந்தனை சிற்பிகள் என்றும், அதனை அடியோடு வெறுப்பவர்களை பழமைவாதிகள், அங்ஙானத்தில் மூழ்கி இருப்பவர்கள் என்றும் பிதற்றுகின்றனர்.
ஒரு பெண் – தாய், மனைவி, சகோதரி என பல பரிணாமங்கள் எடுக்கிறால். ஆனால் அதை புறம் தள்ளிவிட்டு விங்ஙானத்தின் உச்சியில் இருப்பதாக பிதற்றி கொள்ளும் அங்ஙானத்தின் விழிம்பில் இருக்கும் மூடர்கள் அப்பெண்களை அரை நிர்வான தோற்றத்துடனும், முழு நிர்வாணத்திற்கு உட்படுத்தியும் அகம் மகிழ்கின்றனர். இதற்கு நாகரீகம் என்ற வெற்று சாயம் பூசி பெண்ணியம் பேசுகின்றனர்.
பெண்ணியம் பேசும் இவர்களுடைய பண்டைகால நாகரிகம் எவ்வாறு இருந்தது என்பதனை நினைவு கூர்ந்தால் இவர்களுக்கு நாகரீகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது என்பதனை உலகம் விளங்கி கொள்ளும்.
பாபிலோனிய நாகரீகம் ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கியது.
கிரேக்க நாகரீகம் கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழ்ந்த பிறப்பு  என்றும், அவர்கள் ஆண்களுக்கு அடிமை என்றும் கருதியது. ரோமானிய நாகரீகம் புகழின் உச்சியில் இருந்த போது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கருதியது. எகிப்திய நாகரீகம் பெண்களை ஒரு தீமையாகவும், சாத்தானின் சின்னமாகவும் சித்தரித்து.
இது தான் ஆடை கலாச்சாரத்தை பற்றியும், பெண்களுக்கு கொடுக்கும் உரிமை பற்றியும் பேசும் நாகரீக மனிதர்களின் பண்டை கால கலாச்சார வாழ்க்கை.
இந்த நிலையில் 1400 வருடங்களுக்கு முன்னால் முஹம்மது (ஸல்) என்னும் தூதரால் உயிர்பிக்கப்பட்ட இஸ்லாம் பெண்ணியத்தின் கௌரவத்தையும், ஆடை, உடை கலாச்சாரத்தையும் உலகுக்கு எடுத்தியம்பியது.
மூட பழக்கவழக்கங்களிலும், கலாச்சார சீரழிவிலும் வாழ்ந்த மனித சமூகத்தை இஸ்லாம் என்னும் மாசுபடாத கொள்கை முழு மனிதர்களாகவும், சிந்திக்கும் அறிவுடையவர்களாகவும் மாற்றியது. அப்படிபட்ட இஸ்லாம் பெண்களை அதிகம் கண்ணியபடுத்துகிறது.
பெண் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம் என்றது இஸ்லாம். அப்பொக்கிஷம் சிறுவயதில் தந்தையின் அரவணைப்பிலும், பருவ வயதை கடந்து திருமணம் ஆன பிறகு கணவன் என்பவனின் பாதுகாப்பிலும், வயது கடந்த நிலையில் தனது பிள்ளைகளின் கண்காணிப்பிலும், அனுசரனையிலும் இருக்கிறது. அப்பொக்கிஷத்தின் கண்ணியத்தையும், உரிமையையும் பெற்று தருவது இஸ்லாம் மட்டுமே.
இந்நிலையை மாற்றி பெண்களை மோகம், காமம் கொண்டு நிர்வாணப்படுத்தி அனைவரும் அனுபவிக்கும் பொது சொத்தாக மாற்ற துடிக்கின்றது மேற்குலகம். அதனால் சமீபகாலமாக இஸ்லாம் கூறும் பெண்களின் பாதுகாப்பு கவசமான பர்தா, நிகாப் என்னும் ஆடைகளை அரவே ஒழிக்க போட்டி போட்டு கொண்டு களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், கனடா போன்ற நாடுகளில் பெண்களின் உடலை பாதுகாக்க அணியும் பர்தாவிற்கும், முகத்தை மறைக்க அணியும் நிகாபிற்கும் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பர்தாவும், நிகாபும், முஸ்லிம் பெண்களின் ஆடை அல்ல. அது மானத்தை மறைத்து மற்றவர்களின் தீய பார்வையிலிருந்து தனனை பாதுகாத்து கொள்ள விரும்பும் நல்லொழுக்கமுள்ள பெண்களின் ஆடையாகும்.
அந்த ஆடையை தனது கவசமாக பயன்படுட்திய டாக்டர் மர்வா செர்பினி எனும் ஜெர்மனியை சேர்ந்த பெண் ஆக்ஸெல் என்னும் கயவனால் கர்பிணி என்றும் பாராமல் 18 முறை வயிற்றில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். தனது உயிரைவிட தனது மானமும், கலாசாரமும் முக்கியம் என்று வாழ்ந்த பெண்ணிற்கு மேற்குலக கழுகுகள் கொடுத்த தண்டனை.
இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தேறியது. கொடூரமாக கொலைவெறியோடு கத்தியால் குத்தி கொண்டிருக்கும் கயவனை சுட்டுதள்ளுவதிற்கு பதிலாக தடுக்க சென்ற அப்பெண்ணின் கணவனை சுட்டது போலிஸ். இரத்த வெள்ளத்தில் ஷஹீதாக்கபட்டார் டாக்டர் மர்வா செர்பினி.
இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்காவை சேர்ந்த ஆமினா அசில்மி, தாலிபான்களின் நன்னடதையால் இஸ்லாத்தை ஏற்ற யுவன்னா ரெட்லி. ஹிஜாபும், நிகாபும் எனது அணிகலன் என நிகாப் புரட்சியை ஏற்படுத்திய மும்பையை சேர்ந்த சகோதரி ஆஃப்ரின் போன்ற எண்ணற்ற சகோதரிகள் பெண்களின் உறுதிக்கும், தைரியத்திற்கும் வித்திட்டு கொண்டிருக்கிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பு விஷயத்தை கேள்விகுறியாக்கும் மேற்குலகம். அவர்களை போகப்பொருளாக்கி நிர்வாணபடுத்தி ரசிக்க விரும்புகிறது. இந்த அநாகரீக கலாச்சாரத்தை எதிர்த்து போராட வேண்டியது பர்தா, நிகாப் அணியும் பெண்களின் கடமை மட்டும் அல்ல. இது மனித சமுகத்தின் கடமை. இவர்களின் அடிமை தலையிலிருந்து விடுதலை பெற இவர்களின் கேடுகட்ட கலாசாரத்திலிருந்து உலகை பாதுகாக்க புரப்பட வேண்டும்.
ஒரு அறிஞரிடம் உரையாடும் போது அவர் கூறிய சிறிய கதை எனக்கு நியாபகம் வருகிறது. அது கதையாக எனக்கு தெரியவில்லை அது தான் நமது வாழ்க்கையில் மிக முக்கிய அம்சம் என நான் உணர்ந்தேன். அந்த கதையை உங்களுக்கு விவரிக்கிறேன்.
“ஒரு கிளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்து வளர்ந்து வந்தாராம் அதன் எஜமான். அந்த கிளியோ கூண்டுக்குள் நுழைந்ததிலிருந்து விடுதலை, விடுதலை என கத்தி கொண்டே இருந்ததாம்.
அந்த கிளியின் சப்தத்தை கேட்க முடியாத எஜமான் கூண்டை திறந்து வைத்து கிளியை விடுதலை செய்தாராம். ஆனால் கிளியோ, கூண்டை விட்டு வெளியேராமல் மீண்டும் விடுதலை, விடுதலை என்று கத்தியதாம். அதனை கண்ட எஜமான் கிளியை கூண்டிலிருந்து வெளியில் எடுத்து விட்டால் பறந்து சுதந்திரமாக போய்விடும் என நினைத்து கூண்டுக்குள் கையை விட, பயந்து போன கிளி கூண்டின்  ஓரத்தில் போய் நின்று கொண்டு மீண்டும் விடுதலை, விடுதலை என கத்திக் கொண்டிருந்ததாம்”, ஆக விடுதலை என்பது அந்த கிளிக்கு வார்த்தையாக இருந்ததே தவிர வேட்கையாக இருக்குவில்லை.
நம்முடைய வாழ்க்கையிலும் விடுதலை என்பது வார்த்தையாக இருந்து விட கூடாது அதனை வேட்கையோடு எதிர்கொள்ள தலை பட வேண்டும். அந்த வேட்கையில் மனித சமூகத்தின் கண்ணியம், மானம், மனித நேயம் தலைக்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றதோ அப்பொழுது அதனை போராடி மீட்க வேண்டியது மனித சமூகத்தின் கடமை. இன்று நாகரீகம் என்ற போர்வையில், மேற்குலகம் கலாச்சார சீரழிவின்பால் மனித சமூகத்தை அழைத்து செல்ல வீரியத்துடன் மிக வேகமாக பயனிக்கிறது. அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் இஸ்லாமிய உடை மீது தனது முழு கவனத்தை திருப்பி தடைகளை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறது. இந்நிலை மாற்றப்படும், அவர்களுடை திட்டங்களும், எண்ணங்களும் முடிவுக்கு வரும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை நாம் அவர்களுக்கு பறைசாற்ற வேண்டும்.
“அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அனைக்க நினைகின்றார்கள், (இறை) மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை நிச்சயமாக முழுமை படுத்தி வைப்பான். (அல்குர் ஆன் 9:32).

புதுவலசை பைசல்

 http://www.thoothuonline.com
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16